ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முகவரிச் சான்றாகவும், வயதுச் சான்றாகவும்
ஆதாரை ஏற்றுக்கொள்ளும் வகையில் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம்
செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம்
பெறுவதற்கான விண்ணப்பத்தில் முகவரிக்காகவும் வயது சான்றுக்காகவும் ஆதார்
கார்டை உபயோகிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளைத் திருத்தம்
செய்ய வேண்டும் என சட்ட அமைச்சகத்துக்கு கோரிக்கை வந்துள்ளதாக மத்தியச்
சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தா
சான்று, காப்பீட்டுப்
பத்திரம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும்
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தேவையில்லாமல் பலர் வதந்திகளை
பரப்புவதாகவும் சட்டமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
ஆதார் கார்டை உபயோகிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளைத்
திருத்தம் செய்ய மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம்
முடிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment