இஸ்ரேல் நாட்டுப் போர் விமானம் ஒன்றை சிரியா சுட்டு வீழ்த்தியுள்ளது.
சிரியாவின்
விமானப் பாதுகாப்பு அமைப்பையும், அந்நாட்டில் உள்ள இரானிய இலக்குகளையும்
தாக்குவதற்காகச் சென்ற இஸ்ரேலின் ஜெட் போர் விமானம் ஒன்று சிரியாவின் விமான
எதிர்ப்புத் தாக்குதல் வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
பாராசூட்
மூலம் அந்த விமானத்தில் இருந்து தப்பிய விமானிகள் இருவரும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை
தெளிவாகத் தெரியவில்லை.
இரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானம்
ஒன்று இஸ்ரேலைத் தாக்கும் நோக்கில் சிரியாவில் இருந்து ஏவப்பட்டபின்,
இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியது.
முன்னதாக, அந்த இரான் ஆளில்லா விமானம் நடுவானில் தடுத்து அழிக்கப்பட்டது.
- தென்கொரிய விருந்தில் வடகொரியாவைத் தவிர்த்த அமெரிக்கா
- 100 மில்லியன் ஆண்டுகள் காத்திருந்து கதை சொல்லும் சிலந்தி
சிரியாவில்
இருந்து தாக்குதலுக்காக ஏவப்பட்ட அந்த ஆளில்லா விமானம் தடுத்து
அழிக்கப்படும்வரை கண்காணிக்கப்பட்டு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னரே தாங்கள் அந்த விமானத்தைச் சுட்டதாக சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
"சிரியாவில்
இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது வழக்கமானதுதான். எனினும் இஸ்ரேல் போர்
விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுவது தீவிரமான மோதல் போக்கை காட்டுகிறது,"
என்று பிபிசியின் மத்திய கிழக்கு செய்தியாளர் டாம் பேட்மேன் கூறுகிறார்.
வடக்கு இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் ஹைட்ஸ்
பகுதிகளில் சிரியா ராணுவம் இஸ்ரேல் விமானத்தை தாக்கியபோது, பல வெடிச்
சத்தங்களைக் கேட்டதாகவும், ஜோர்டான் மற்றும் சிரியா உடனான இஸ்ரேல் வான்
எல்லையில் பல தாக்குதல் மற்றும் எதிர்த் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாகவும்
அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
இரான் சிரியாவில் என்ன செய்கிறது?
கடந்த
2011 முதல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வரும் சிரியா அதிபர்
பஷார் அல்-அசாத்தின் படைகளுக்கு உதவியாக ரஷ்யா மற்றும் இரான் படைகளும்
சண்டையிட்டு வருகின்றன.
சிரியாவில்
நிரந்தரமான ஒரு ராணுவத் தளத்தை அமைக்க இரான் முயன்று வருவதாக ஒரு
மேற்கத்திய உளவுத் துறை தகவல், கடந்த நவம்பர் மாதம் பிபிசிக்கு கிடைத்தது.
''அது நடக்க இஸ்ரேல் அனுமதிக்காது,'' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு அப்போது கூறியிருந்தார்.
தனது பிராந்திய செல்வாக்கை
வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், லெபனானில் உள்ள ஷியா பிரிவு ஹிஸ்புல்லா
அமைப்பு மூலம் லெபனானில் சரக்குப் போக்குவரத்துக்கான பாதை ஒன்றை அமைக்கவும்
இரான் முயன்று வருவதாக இரான் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
பிற செய்திகள்:
- ஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா
- ஆய்வகத்தில் மனித கரு முட்டையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
- என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்?
- சினிமா விமர்சனம்: சவரக்கத்தி

No comments:
Post a Comment