அரியானா மாநிலம் கூர்கான் அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு
கொண்டு வராத காரணத்தினால் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்த டாக்டர்
மற்றும் நர்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அனுமதிக்க மறுப்பு அரியானா
மாநிலம் கூர்கானை சேர்ந்தவர் அருண் கேவாட். இவரது மனைவி முன்னிகேவாட்(25).
கர்ப்பிணியான அவரை பிரசவத்திற்காக கூர்கானில் உள்ள அரசு மருத்துவமனைக்கு
கணவரும்,உறவினரும் அழைத்து வந்தனர். பொது சிகிச்சை பிரிவுக்கு சென்ற அவரை,
அங்கிருந்த டாக்டர்கள் பிரசவ வார்டிற்கு செல்லுமாறு கூறினர். அவர்கள் அங்கு
சென்ற போது, ஆதார் அட்டை கையில் இல்லாத காரணத்தினால், உள்ளே அனுமதிக்க
மறுத்துவிட்டனர். இதனால், பிரசவ வார்டு அமைந்துள்ள வளாகத்தில் அவருக்கு
குழந்தை பிறந்தது.
உறவினர்களிடம் உதவி இது குறித்து அருண் கேவட் கூறுகையில், காலை 9 மணிக்கு
மருத்துவமனைக்கு சென்றோம். டாக்டர்கள் பிரசவ வார்டிற்கு செல்லுமாறு
கூறினர். அங்கு சென்ற போது ஊழியர்கள் ஆதார் அட்டையை கேட்டனர். கையில் அட்டை
இல்லாத காரணத்தினால், ஆதார் எண்ணை வழங்கினேன்.
அட்டையை பிறகு கொண்டு வருவதாக கூறினேன். ஆனால், அங்கிருந்த பெண் மருத்துவரும், நர்சும் அட்டை கொண்டு வந்தால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார் எனக்கூறினர். இதனால், எனது மனைவியை பார்த்து கொள்ளுமாறு உறவினர்களிடம் கூறிவிட்டு ஆதார் அட்டையை எடுக்க சென்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
சட்டை செய்யாத ஊழியர்கள் ராம் சிங் என்ற உறவினர் கூறுகையில், முன்னியுடன் பிரசவ பிரிவு அறைக்கு சென்ற போது,எங்களை அங்கு அனுமதிக்கவில்லை. வெளியில் அனுப்பிவிட்டனர். அப்போது அதிக வலி ஏற்பட்டதால் வளாகத்திலேயே குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது கூட ஊழியர்கள் ஒருவர் கூட உதவி செய்யவில்லை.
அங்கு நடந்ததை அங்கிருந்தவர்கள் படம் பிடித்த போதுகூட யாரும் உதவி செய்யவில்லை. குழந்தை பிறந்த பிறகு வளாகம் முழுவதும் ரத்தம் இருந்ததால், ஊழியர்கள் உதவிக்கு வந்ததாக கூறினார். சஸ்பெண்ட் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட தலைமை மருத்துவர் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பாக டாக்டர் மற்றும் நர்சை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

நன்றி : dailyhunt.in

No comments:
Post a Comment