ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியுடன், இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் தனிப்படையினர் - படம் சிறப்பு ஏற்பாடு
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் சுட்டுக்கொல்லப்பட்ட
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியுடன் இருந்து பலத்த காயமடைந்த கொளத்தூர்
இன்ஸ்பெக்டர் முனிசேகர் தன் குடும்பத்தாரிடம் நண்பரை சுட்டுக்கொன்று
விட்டார்களே என்று கதறி அழுதுள்ளார்.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிச்சென்ற நாதுராமையும், தினேஷ் சதுர்வேதியையும் பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி, முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் பாலிக்கு சென்றது.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்து தப்பிச்சென்ற நாதுராமையும், தினேஷ் சதுர்வேதியையும் பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டி, முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் பாலிக்கு சென்றது.
நேற்றிரவு கொள்ளையர்களை பிடிக்க நள்ளிரவு 2.30 மணி அளவில் அவர்கள்
மறைந்துள்ள கிராமத்திற்குள் சென்ற தனிப்படையினரை ஏற்கெனவே தகவல் தெரிந்த
நிலையில் மறைந்திருந்து செங்கற்களால் சரமாரியாக கிராம மக்களுடன் சேர்ந்து
நாதுராம் தாக்கி உள்ளான். இதில் முனிசேகர் முகத்தில் பலத்த காயமடைந்து கீழே
விழுந்தார். இரும்பு ராடால் தாக்கப்பட்டு கீழே விழுந்த பெரியபாண்டியின்
துப்பாக்கியை பிடுங்கி அவரை சுட்டுகொன்று விட்டு அந்தக் கும்பல்
தப்பிச்சென்றது.
இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தை கேட்டு
பதறிப்போன முனிசேகரின் குடும்பத்தார் அவரைத் தொடர்பு கொண்ட போது போனில்
பேசிய முனிசேகர் தன் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டுகிறது மற்றபடி பிரச்சினை
இல்லை என்று கூறியவர், திடீரென உடைந்து அழ ஆரம்பித்துள்ளார். அவரது
குடும்பத்தார் பதறிப்போய் என்ன என்று கேட்ட போது உடனிருந்த நண்பர்
பெரியபாண்டியை கண்ணெதிரில் கொன்று விட்டார்களே என்று கதறி அழுதுள்ளார்.
குடும்பத்தினர்
அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். முனிசேகரை சென்னைக்கு அழைத்து வந்து
சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார் கோரிக்கை
வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment