ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்ட
பெரியபாண்டி குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
பெரியபாண்டி குடும்பத்தார் விபரங்களைக் கேட்ட மு.க.ஸ்டாலின் பெரிய பாண்டியின் இரண்டு மகன்களை அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
“என்னைப்பொறுத்தவரையில்
நான் சொல்ல விரும்புவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பெரியபாண்டி ராஜஸ்தான்
மாநிலத்திற்கு செல்லும் நேரத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அல்லது
ஒரு ஐஜி தலைமையில் ஒரு படையை கொண்டு சென்றிருப்பார் என்றால் இப்படி ஒரு
நிலைக்கு ஆளாகி இருக்க வேண்டி இருந்திருக்காது.
”
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments:
Post a Comment