வங்கிக் கணக்கு, பான் எண்ணுடன், ஆதார் எண் இணைப்பதற்கான டிசம்பர் 31-ம்
தேதி காலக்கெடுவை நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய
அரசின் சமையல் எரிவாயு, மதிய உணவு, முதியோர் ஓய்வூதியம் போன்ற
நலத்திட்டங்கள் மற்றும் வங்கி உட்பட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்
கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக மொபைல் எண்ணுடன் ஆதார் எண்
இணைக்க வலியுறுத்தப்பட்டது.
பின்னர் வருமான வரி கணக்கு நிரந்தர எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைக்க
வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. புதிதாக பான் எண் பெற
விரும்புபவர்களும் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று அறிவித்தது.
இதில்
வங்கிக் கணக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளுடன் ஆதார் எண் இணைப்பதற்கு
டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதை நீட்டிக்க வேண்டும்
என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கு சமீபத்தில்
உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, ''பான் எண்ணுடன் ஆதார் எண்ணை
இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31 வரை நீட்டிக்க தயார். எனினும்
மொபைல் எண்ணுடன் ஆதாரை, 2018 பிப்ரவரி 6-ம் தேதிக்கு முன் இணைக்க வேண்டும்
என்ற காலக்கெடுவில் மாற்றம் இல்லை'' என்று மத்திய அரசு தெரிவித்தது.
அதன்படி,
2018 மார்ச் 31 வரை பான் எண்ணுடன் ஆதார் இணைக்க அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில்
வங்கி கணக்கு மற்றும் பான் எண்ணுடன், ஆதார் எண் இணைப்பதற்காக
அறிவிக்கப்பட்டு இருந்த டிசம்பர் 31-ம் தேதி காலக்கெடுவை நிறுத்தி வைத்த
மத்திய அரசு இன்று (புதன்) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு ஏற்றவகையில்
2002-ம் ஆண்டின் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் விதிகளில்
மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரிசர்வ்
வங்கியின் ஆலோசனை பெற்று இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதாகவும், அரசு புதிய
தேதி அறிவிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment