Latest News

நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் முதல்வருடன் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும்: பெரியபாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஸ்டாலின் பேட்டி

விமான நிலையம் பெரியபாண்டி உடல் வைக்கப்பட்டுள்ள இடம், மு.க.ஸ்டாலின்   -  படம்: சிறப்பு ஏற்பாடு 

சென்னை விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேவைப்பட்டால் ராஜஸ்தான் முதல்வருடன் எடப்பாடி பழனிசாமி பேசி நாதுராமைப் பிடிக்க முயற்சி எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

திமுக சார்பில் என்னுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளேன். வீர மரணம் அடைந்திருக்கக்கூடிய பெரியபாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நேரத்தில் நான் கேட்டுக்கொள்வது அவரது மரணத்திற்கு காரணமான ராஜஸ்தானில் மறைந்திருக்கும் அந்த கொலைகாரனை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

நாதுராமை கைது செய்து தமிழகம் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜஸ்தான் முதல்வருடன் பேசி நாதுராமை  பிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கான தீவிரத்தை அவர் காட்டிட வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் நாதுராமைப் பிடிக்க தமிழக டிஜிபி அல்லது காவல் ஆணையரையோ அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறிய அளவில் தனிப்படை அனுப்பப்பட்டதாகவும், இது போன்ற நேரங்களில் பயணப்படியும் குறைவாக அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதே?

பொதுவாக இந்த நேரத்தில் அரசியல் நோக்கத்தோடு கேள்விகளை எதிர்கொள்ள விரும்பவில்லை. அதனால் தான் சொல்கிறேன், தேவைப்பட்டால் ராஜஸ்தான் முதல்வரோடு பேசி கொலைகாரனை பிடிக்க முயற்சி எடுக்க வேண்டும். காவல் ஆணையரை அங்கு அனுப்பி கொலைகாரனை பிடிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.