ஆர்.கே. நகரில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மற்றும் டிடிவி.தினகரன்
ஆகியோரை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி
சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆர்.கே.நகர் தொகுதியில்
போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ்,
சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோர் மீது பணப்பட்டுவாடா,
பரிசுபொருள் வழங்கியது தொடர்பான புகார்கள் கடந்த தேர்தலின்போது
கொடுக்கப்பட்டுள்ளதால், அதனடிப்படையில் மூவரையும் தேர்தலில்
போட்டியிடாதவகையில், தடுக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்
ஏ.சி.சத்தியமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு
முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அறிவிக்கப்பட்டு,
வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ள நிலையில் அப்போதெல்லாம் எதிர்க்காமல், தற்போது இது போன்ற
வழக்கை தொடர்வது ஏன் என கேள்வி எழுப்பினர்.
பின்னர், காலம் தாழ்த்தி
தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,
தற்போதைய நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்து
சத்தியமூர்த்தி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

No comments:
Post a Comment