இமாச்சலப் பிரதேசத்தில் இன்று பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி |
பிரதமர் நரேந்திர மோடி, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில்
ஏழைகளுக்கு வழங்கிய 57,000 கோடி ரூபாய் மானியத்தை தவறாக பயன்படுத்தப்பட்டது
என்று கூறியுள்ளார்.
"மானியங்கள் என்ற பெயரில் கருவூலத்தைத் திருடுவதற்கு மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். கடந்த காலத்தில், மானியம் வழங்கிட 57,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதில், பெரும் ஊழல் கசிந்தது" என மோடி இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "இப்போது எங்கள் கொள்கையால் அந்த ஊழல் கசிவு
நிறுத்தப்பட்டது. காங்கிரஸில் உள்ள தலைவர்களால் இதை தாங்கிக்கொள்ள
முடியாது, அதனால் அவர்கள் என்னைத் தாக்கிப் பேசி வருகிறார்கள்.
ஒரு ரூபாய் 15 பைசாவாக கிராமங்களைச் சென்றடைகிறது எனும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஓர் அறிக்கையின் அடிப்படையிலேயே எனது விமர்சனங்களை இங்கு எடுத்துக்கொள்கிறேன். அந்த வகையில் ராஜீவ் ஊழல் நோயைக் கண்டுபிடித்த ஒரு டாக்டர் ஆவார். ஆனால் அதற்காக அவர் எதையும் செய்யவில்லை.
எங்களுடைய அரசு வளர்ச்சியை இலக்காக கொண்டதாகும். சாலை வசதிகளை ஏற்படுத்தி நாட்டின் பல பகுதிகளை இணைப்பதையே எங்கள் அரசு மையப்படுத்தி வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் இக்கால சாட்சியாக நான் இருக்கிறேனே தவிர, இங்கு பாஜகவுக்கு நான் உற்சாகம் காட்டுவது என் வேலையில்லை. இது ஒரு பக்கப் போட்டியாகும். கடந்த 20 ஆண்டுகளில் நான் கலந்துகொள்ளாத ஒரு தேர்தல்கூட இல்லை, ஆனால் முன்னெப்போதும் காணாத ஒரு தேர்தலாக இது இருக்கிறது. காற்று எங்கே வீசுகிறது என்று எனக்குத் தெரியும். ஊழல் நிறைந்த காங்கிரஸிற்கு எதிராக ஒரு புயல் இங்கு கிளர்ந்தெழுகிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.
இமாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தனது தேர்தல் பயணத்தின் இறுதிச் சுற்றுப் பிரச்சாரத்தை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment