காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி | கோப்புப் படம்: கே.முரளிக்குமார்
காங்கிரஸ்
கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கி
ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ''சின்ஹசானிலிருந்து விலகுங்கள்''
(பிரதமர் பதவியிலிருந்து விலகுங்கள்') என்று குறிப்பிட்டுள்ளார். சமையல்
எரிவாயு விலையை மீண்டும் உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு
வலியுறுத்தியுள்ளார்.
''எரிவாயு விலையுயர்வு, ரேஷன் விலையுயர்வு. வெற்று வாக்குறுதிகளை
நிறுத்துங்கள். வட்டி விகிதங்களை சரிசெய்யுங்கள், வேலைவாய்ப்பை வழங்குங்கள்
அல்லது பதவியை விட்டு வெளியேறுங்கள்" என்றும் அதில் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலைமாற்றங்களின்படி
மானிய விலையில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை 4 ரூபாய் 50 காசுகள்
உயர்த்தப்பட்டுள்ளது,
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டருக்கு
ரூ.93 அதிகரித்துள்ளது. இதன்மூலம் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.742 ஆக
அதிகரித்துள்ளது. மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓர் ஆண்டில்
மட்டும் 10க்கும் மேற்பட்ட முறைகளில் சமையல் எரிவாயுவின் விலையை
உயர்த்தியுள்ளது.
No comments:
Post a Comment