அஜ்மீரி அப்துல் ரஷீத்
அக்ஷர்தாம் கோயில் தாக்குதல் வழக்கில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி அஜ்மீரி அப்துல் ரஷீத் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள அக் ஷர்தாம் கோயிலில் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 32 பக்தர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் 3 கமாண்டோ வீரர்களும் மாநில போலீஸ் காவலர் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில் பங்கு
வகித்தவராக கருதப்படும் அஜ்மீரி அப்துல் ரஷீதை அகமதாபாத் போலீஸார் நேற்று
அதிகாலை கைது செய்தனர். ரியாத்தில் தலைமறைவாக இருந்த ரஷீத் 15
ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அகமதாபாத் வந்தார். அப்போது அவரை போலீஸார்
கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 28 பேர் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் தலைமறைவாக இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
No comments:
Post a Comment