மேகக்கூட்டங்கள் போக்கு காட்டுவதால் காற்றின் திசையை வைத்து தான்
சென்னைக்கு மித மழையா? கனமழையா? என்பதை அறிய முடியும். இது குறித்து
தற்போதைய நிலவரத்தை தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அவரது முக நூல் பதிவு:
“வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பு
கனமழையா? அல்லது நின்று ‘விளையாடும்’ மழையா?
சென்னை
நகர்புறப்பகுதி முழுவதையும் மேகக்கூட்டங்கள் பரவி நிதானமான மழையை பெய்ய
இருக்கிறது. மிகவும் அடர்த்தியான, பெரிய மேகக்கூட்டம் சென்னைக்கு அருகே
வருகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்பது அவசியம். ஒருவேளை வராவிட்டால்,
இந்த மிதமான மழை மட்டும் நமக்கு கிடைக்கும்.
சென்னைக்கு அருகே
மிகவும் அடர்த்தியான, தீவிரமான மேகக்கூட்டங்கள் வந்துவிட்டன. காற்று
இல்லாத, மிதமாகப் பெய்யும் மழை பெய்யும். இதற்கிடையே மழைக்கு சாதகமான
வெப்பநிலை சென்னைக்கு அருகே உருவானால், குறைந்த காற்றழுத்த
தாழ்வுப்பகுதிக்குள் சுழன்று கொண்டு இருந்த மேகக்கூட்டங்கள் சென்னைக்கு
மேலே பரவி கனமழையை கொடுக்கும்.
ஒருவேளை அந்த மேகக்கூட்டம்
சென்னையைவிட்டு விலகினால், நமக்கு மிதமான, மிதமான மழை மட்டுமே கிடைக்கும்.
என்னுடைய அடுத்த பதிவு என்பது மழை எப்படி பெய்யும்? என்பதைக் குறிப்பிட்டு
இருக்கும்.
அதாவது, நமக்கு மிதமான மழை கிடைக்குமா?அல்லது, கனமழை இருக்குமா? என்பதை அடுத்த பதிவில் உறுதியாகக் கூறிவிடுவேன்”.
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சற்றுமுன் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment