இந்தோனேசியாவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை தொடர்ந்து வெடித்து வருவதால், பாலி தீவின் விமான நிலையம் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது.
பாலி
தீவில் மவுண்ட் அகுங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 21-ம் தேதி
லேசாக சீறத் தொடங்கியது. கடந்த 25-ம் தேதி முதல் எரிமலை சீற்றம்
அதிகரித்தது. இதன்காரணமாக 10 கி.மீ. சுற்றளவுக்கு எரிமலை சாம்பல்
பரவியுள்ளது.
எரிமலை அவ்வப்போது வெடித்துச் சிதறுவது சுமார் 12 கி.மீ. தொலைவு வரை
கேட்க்கிறது. மலை உச்சியில் சுமார் 11,150 அடி வரை கரும்புகை
சூழ்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாலி தீவு விமான நிலையம், அருகில் உள்ள
லொம் போங் தீவு விமான நிலையம் ஆகியவை மூடப்பட்டுள்ளன. 450-க்கும் மேற்பட்ட
விமான சேவைகள் திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் இன்றும் எரிமலை வெடிப்பு தொடர்ந்து வருவதால் இரண்டாவது நாளாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
எரிமலை வெடிப்பால், அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இதுவரை 10,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர்.
இந்தியர்களுக்கு உதவ ஏற்பாடு
மவுண்ட்
அகுங் எரிமலை வெடிப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா
ஸ்வராஜ், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்தியர்களுக்கு
உதவி தேவைப்பட்டால் இந்திய குழுக்கள் உதவ தயாராக உள்ளன என்றும்
கூறியுள்ளார்.
இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டர் பக்கத்தில்,
"கவலைப்பட வேண்டாம். இந்தோனேசியாவிலுள்ள இந்தியத் தூதர் பிரதிப் ராவத்தின்
குழுவினர் பணியில் உள்ளனர். நான் தொடர்ந்து நிலைமையை காண்காணித்து
வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment