மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 230
நாணயங்கள், ஒரு கிலோ இரும்பு துண்டுகள், பிளேடுகளை அறுவை சிகிச்சை செய்து
மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில்
உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் முகமது மசூத் (வயது 35க்கு மேல்
இருக்கலாம்) என்பவர் வயிறு வீங்கி, மயக்கமடைந்த நிலையில்,
அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த
மருத்துவர்கள் அதிர்ந்து போயினர்.
வயிற்றுக்குள் நாணயங்கள், இரும்புத் துண்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது வயிற்றில்
இருந்து 230 நாணயங்கள், ஒரு கிலோ மதிப்புள்ள இரும்புத் துண்டுகள்,
பிளேடுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
இதுகுறித்து அறுவை சிகிச்சை
செய்த மருத்துவர் சர்மா கூறுகையில் ‘‘நாணயங்கள் மற்றும் இரும்புத்
துண்டுகளை முழுங்கிய அந்த நபர் மனநலம் பாதித்தவராக இருக்கலாம். யாருக்கும்
தெரியாமல் அவற்றை முழுங்கியுள்ளதாக தெரிகிறது’’ எனக் கூறினார்.
No comments:
Post a Comment