இந்தோனேசியாவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை தொடர்ந்து வெடித்து வருகிறது.
பாலி தீவின் விமான நிலையங்கள் இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளன.
சுமார்
40,000க்கும் மேற்பட்ட மக்கள் அவர்கள் வீடுகளிலிருந்து தற்காலிகமாக
வெளியேறியுள்ளனர். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து
இந்தோனேசியா அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.
இந்தோனேசியாவைப் பொறுத்தவரை அங்கு எரிமலை வெடிப்புகள் பழக்கப்பட்ட
செய்திதான். இந்தோனேசியாவில் மட்டும் 70க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன.
அதில்
சில எரிமலைகள் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. அவை எப்போது
வெடிக்கும் என்பதை தீர்மானிக்க முடியாதவை. இவற்றால் உயிரிழப்புகளும்
ஏற்பட்டுள்ளன.
இதோ இந்தோனேசியாவின் ஆபத்தான அந்த எரிமலைகள்:
தம்போரா
சும்பாவா
தீவிலுள்ள மவுண்ட் தம்போரா 1815-ம் ஆண்டு வெடித்ததில் சுமார் 12,000 பேர்
பலியாகினர். மேலும் இதனால் ஏற்பட்ட பஞ்சத்தில் 80,000 பேர் உயிரிழந்தனர்.
கிரகட்டோவா
கிரகட்டோவா
தீவு கிரகாட்டோ எரிமலை வெடிப்பால் 1883 ஆம் ஆண்டு வரைப்படத்திலிருந்தே
அழிக்கப்பட்டது. மேலும் இதில் 36,000 பேர் உயிரிழந்தனர். 1928-ம் ஆண்டு
மீண்டும் அதே பகுதியில் புதிய எரிமலை உருவாகியது.
கெலுட்
மவுண்ட்
கெலுட் எரிமலை 1568-ம் ஆண்டு வெடித்தது. இதில் 10,000 பேர்
கொல்லப்பட்டனர். 1919 ஆம் ஆண்டு இந்த எரிமலை மீண்டும் வெடித்ததில் 5,000
பேர் உயிரிழந்தனர்.
மெராபி
உலகின் மிகவும்
ஆபத்தான எரிமலையாக கருதப்படும் மெராபி 1930-ம் ஆண்டு வெடித்து சிதறியதில்
1300 பேர் உயிரிழந்தனர். 2010-ம் ஆண்டு மெராபி மீண்டும் வெடித்ததில் 300
பேர் உயிரிழந்தனர்.
சினாபங்க்
சுமத்ரா
தீவிலுள்ள சினாபங்க் எரிமலை 2014--ம் ஆண்டு வெடித்து சிதறியதில் 16 பேர்
பலியாகினர். 2016-ம் ஆண்டு மீண்டும் வெடித்ததில் 7 பேர் பலியாகினர்.
அகுங்
பாலி
தீவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை 1963-ம் ஆண்டு வெடித்தபோது 1,600 பேர்
உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது அகுங் மீண்டும் வெடிக்கத்
தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment