ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்
செயலாளருமான ஜெ.தீபா தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் நிலவும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண
மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், டெங்கு விவகாரத்திலும் அரசு
சரியாக செயல்படவில்லை.ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா இடத்தில்
இருந்து போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.
இரட்டை
இலை சின்னம் விவகாரத்தில் எங்கள் மனுவும் தேர்தல் ஆணைய பரிசீலனையில்
உள்ளது. தொண்டர்கள் யாருக்கு இரட்டை இலை கிடைக்க வேண்டும் என்று
விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் சின்னம் கிடைக்க வேண்டும்.
முதல்வரும்,
துணை முதல்வரும் மத்திய அரசு மற்றும் கட்சியில் உள்ள சில வலிமையான
சக்திகளின் கட்டாயத்தின்பேரில்தான் இணைந்துள்ளனர். எனவே, அவர்கள் இடையே
புரிதல் இல்லாத நிலைதான் இருக்கும். தினகரனுக்கு மக்களைப் பற்றி கவலை
இல்லை. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் செயல்படுகிறார்.
முதல்வர்
பழனிசாமி அணி யில் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் சொன்னதில்லை.
அதேவேளையில், தொண்டர்களும், மக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படி
செயல்படுவேன் என்றார்.

No comments:
Post a Comment