Latest News

நவீன இந்தியாவின் சிற்பி சர் சையது அகமது கான் அலிகர் முஸ்லிம் பல்கலை. நிறுவனருக்கு பிறந்தநாள்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத் தின் நிறுவனரான சர் சையது அகமது கானுக்கு  198-வது பிறந்த நாள்.
அவரது பெயரைக் கேட்டவுடன் வரலாற்றுப் பாடத்தில் படித்த ‘அலிகர் இயக்கம்’ நினைவுக்கு வரும். இந்தியர்களுக்கு கல்வி அறிவு கொடுப்பதை வாழ்நாள் முழுவதும் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தனிமனிதனின் கோட்பாடு ஓர் இயக்கமாக மாறி அது இந்திய வரலாற்றில் அலிகர் இயக்கம் என அழைக்கப்படுகிறது.

இங்கிலாந்து சென்று கல்வி பயின்ற அவர், ஆங்கிலேயரின் வெற்றி சூத்திரம் அறிவியல் கல்வி தான் எனக் கண்டறிந்தார். அந்தக் கல்வியை இந்திய மக்களுக்கு கற்பிக்க முயன்றார்.

இடைக்கால இந்தியாவின் மதரசாக்களில் இந்து, முஸ்லிம் என சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் கல்வி கற்று வந்தனர். இந்த வகையில் 1859-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரியாக இருந்த சையது அகமது கான், முராதாபாத் தில் தொடங்கிய பாரசீக மதரசாவை அவரது கல்வி இயக்கத்தில் முதல் பணி எனக் கூறலாம். இங்கு இந்து, முஸ்லிம் பயன்பெறும் வண்ணம் உருது, பாரசீகம், அரபி, சமஸ் கிருதம், ஆங்கிலம் என ஐந்து மொழி களையும் கற்பிக்க செய்தார்.

மே 24, 1875-ம் ஆண்டில் உ.பி.யின் அலிகர் நகரில் ‘ஆங்கிலோ இந்தியன் முகம்மது ஓரியண்டல் கல்லூரியை’ நிறுவினார். அதுவே, இன்று நாட்டின் மத்திய பல்கலைக் கழகங்களில் பழமையானதாக 37,000 மாணவர்கள் பயிலும் நிறுவனமாக சிறந்து விளங்குகிறது.

அறிவியல் கல்வியை கற்றுக் கொள்! ஆங்கிலேயர் போல் நீயும் விரைவில் முன்னேறுவாய்!’ எனக் கூறி கல்வி நிலையம் துவங்கி யதற்காக சர் சையது ஒரு ‘காபீஃர் (முஸ்லிம் அல்லாதவர்)’ என ஃபத்வா அளிக்கப்பட்டது. இவரது கல்வி நிறுவனத்தில் படிப்பதும் நிதி உதவி அளிப்பதும் இஸ்லாமியச் சட்டப்படிக் குற்றம் என மெக்கா வில் வெளியான மற்றொரு ஃபத்வாவில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து வந்த பல கொலை மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் அகமது கான் தன் கல்விப் பணிகளை செய்து வந்தார். 1863-ல் காஜீப்பூரில் ‘அலிகர் அறிவியல் கழகம்’ தொடங்கினார்.

ஆங்கிலேயரின் சிறந்த விருது களான கே.சி.எஸ்.ஐ மற்றும் சர் பட்டம் பெற்ற அகமது கான், வரலாறு பாடத்துக்கு முக்கியத் துவம் அளித்தார். பல ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாற்று நூல்களை கூடுதலான விவரங்களுடன் உருதுவில் மொழி பெயர்க்கச் செய்தார். இதனால் தான் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் வரலாற்று துறை ஆசியாவிலேயே மிகப்பெரியதாக விளங்குகிறது.

மதநல்லிணக்கத்திற்கு பெயர் போன அலிகரின் கல்வி நிறுவனத் துக்காக பனாரஸ், விஜயநகரம், பாட்டியாலா ஆகிய மாகாணங்க ளின் இந்து அரச பரம்பரையின ரும் நிதி உதவி அளித்தனர். இங்கு கட்டப்பட்டிருந்த 50 வகுப் பறைகளில் 8 வகுப்பறைகள் இந்துக்கள் அளித்த நிதி உதவி யால் கட்டப்பட்டவை. 1898-ம் ஆண்டில் சர் சையது மறைந்த போது இங்கு 285 முஸ்லிம் மற்றும் 64 இந்து மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.