பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
கல்வி ஊக்கத் தொகை மற்றும் சீருடை வழங்குதல்
கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து செய்து வருவதை போல் 2016 ஆம் ஆண்டும் நமது மஹல்லாவில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ- மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான நோட்புக்குகள் மற்றும் ஒரு வருட காலத்திற்கு ஸ்கூல் பீஸ் கட்டி தரப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட உணவுப் பொருட்களின் விபரம்:
பாக்கியாத்துபள்ளிமினாரா
அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி மராமத்துப் பணி
அல்லாஹ்வின் உதவியால் சென்ற ரமலான் மாதத்தில் அல் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் பள்ளியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானித்தப்படி, பள்ளியின் மேல் தளத்திற்கு அலுமினிய ஷிட் கூரை போடுவது, பெயிண்ட் அடிப்பது, மனோரா வேலை மற்றும் சிற்சில மராமத்து வேலைகள் குறித்தும் அதன் பட்ஜெட் குறித்தும் நமது முஹல்லாவில் உள்ள சில சகோதர்களிடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நல்லுள்ளங்கொண்ட அந்த சில சகோதர்கள் மூலம் வந்த வரவு 4,50,000.00 (நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்கள். TIYA வின் ஒத்துழைப்போடு அப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.

செடியங்குளம்
அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று மிகவும் பழமை வாய்ந்த செடியன் குளம். வரலாற்று சிறப்பு மிக்க இக்குளத்தை பொதுமக்கள் நீராடவும் பெருவாரியான மக்கள் கரையோரத்தை நடைபாதையாகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இக்குளத்தின் கரையோரம் 5 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் இருந்த போதிலும் அதில் எதிலும் நீண்டகாலமாக மின்விளக்குகள் பொருத்தப்படாததால் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி காணப்பட்டது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து சென்றனர். இதுகுறித்து அறிந்த TIYA அமைப்பின் சார்பில் வடக்கு மற்றும் தெற்கு பகுதி செடியன் குளக்கரைகளில் கரை பகுதி முழுவதும் ஒளிபடரும் வகையில் மின்விளக்குகள் இரண்டு பொருத்தப்பட்டு தற்போது அந்த பகுதியை இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்க செய்துள்ளது.

பெண்கள் கழிவ றை திறப்பு
கட்டிமுடித்து 7 வருடங்களாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்து வரும் கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனே திறந்துவிட வேண்டி வலியுறுத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், CM செல் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் TIYA சார்பாக கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு நம் மனுவின் மீது ஒரு வார காலத்திற்குள் துரித நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

கழிவறை கோரிக்கை கோ
நமது மஹல்லாவில் உள்ள ஒரு ஏழையின் வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தால் ஒரு கழிவறை கட்டிதருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. எவ்வித வழிகளுமில்லாத காரணத்தாள் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு நமது அமீரக TIYA வின் தலைவர் மற்றும் துணை தலைவர் அகியோரின் பங்களிப்பில் TIYA வின் சார்பில் அந்த கோரிக்கையை நிறைவேற்றப்பட்டது.
கழிவுநீர் வடிகால் கட்டிதருமாறு வந்த கோரிக்கை
நமது முஹல்லாவிலுள்ள குட்டப்புற வீடு – தாயார் வீடு இடையிலுள்ள சந்தில் 17 வது வார்டின் முன்னாள் கவுன்சிலர் திருமதி. ரபீக்கா அவர்களின் முயற்சியால் இன்டர்லாக் ரோடு போடுவதற்கான பணிகள் துவங்கின, இதனால் அந்தப் பகுதியில் கழிவுநீர் செல்வதற்கான வழிகள் அடைபட்டது. இந்த கழிவுநீர் வடிகாலை புதிய ரோட்டிற்கு பாதிப்பில்லாத வகையில் குழாய் பதித்து கொண்டு செல்ல சுமார் 50,000 திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு இதில் 25,000 ரூபாயை ஏழ்மையான அந்தப் பகுதி மக்களே இணைந்து பங்களிப்பு செய்ததுடன் எஞ்சிய தொகைக்கு TIYAவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு எஞ்சிய தொகையான 25,000 வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.
மேலத்தெரு பெண்கள் பூங்காவில் மின்னொளி
நமது மேலத்தெருவில் அமைந்துள்ள பெண்கள் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் மின்விளகில் போதிய மின்னொளி இன்றி பூங்காவின் சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே கடந்து சென்றனர். இதுகுறித்து அறிந்து ( TIYA ) அமைப்பின் சார்பில் பூங்காவினுள் அமைந்துள்ள மின்கம்பத்தில் விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு, தற்போது பூங்கா முழுமையும், அவ்வழியும் மின்னொளியில் ஜொலிப்பதால் அப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
என்று அன்புடன்
அன்பிற்கினிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்து ஹூ
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே, அதையே (பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (சூரா அல் பகரா 2:271)
வல்ல நாயன் அல்லாஹ்வின் நாட்டத்தால், தஞ்சை மாவட்டம். அதிராம்பட்டினத்தின் அமீரக வாழ் மேலத்தெரு மஹல்லாவாசிகளால் கடந்த 29.12.2005 அன்று தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) என்ற அமைப்பு தாயகத்தில் பாதுகாப்புடன் கூடிய நல்வாழ்வை நம் சமூகத்தில் அமைப்பதற்காக அமீரகத்தில் துவங்கப்பட்டது. அதனடிப்படையில் தாயகத்தில் வாழ்கிற நமது மஹல்லாவாசிகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற பல்துறைகளில் முன்னேற்ற வாழ்வு ஏற்படுத்தப் பாடுபடுவதே இவ்வமைப்பின் அடிப்படை நோக்கமாகும்.
அல்லாஹ்வுடைய பேருதவியால் கடந்த 29.12.2005 முதல் தற்போது வரையும் அமீரக TIYA பொறுப்பில் இருந்தவர்களின் கடுமையான உழைப்பினாலும். மஹல்லா சகோதரர்களின் நல்லாதரவின் காரணமாகவும் இவ்வமைப்பு நல்லமுறையில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. அல்ஹம்துல்லில்லாஹ்! அதற்கான சில சான்றுகளை இதன்வழி தங்கள் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
அவை வருமாறு:

இஃப்தார் நிகழ்ச்சி
TIYA சார்பாக வருடா வருடம் ரமளான்
மாதம் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம் அந்தவகையில் ரமளான் பிறை 19 (24.06.2016 ) வெள்ளிக்கிழமை மாலை டேரா
துபாய் ஹம்ரியா லேடிஸ் பார்க்கில் அமீரக (TIYA) சார்பாக அமீரகத்தில் வாழும் நமது மஹல்லா சகோதரர்கள்
அனைவரும் பங்கேற்க்கும் விதமாக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இன் நிகழ்ச்சிக்கு நமதூர் அனைத்து முஹல்லா
வாசிகளுக்கும் அழைப்பு செய்யப்பட்டது நமது அழைப்பை ஏற்று அனைவரும் கலந்துகொண்டனர். குறிப்பு நமது முஹல்லாவை சார்ந்த குடும்பத்தோடு
வாழும் நமது சகோதரர்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா
புகழும் வல்ல இறைவனுக்கே
பித்ரா நிதி வசூல்
TIYA வின் சார்பாக எல்லா
வருடங்களும் நோன்பு காலங்களில் நமது முஹல்லாவாசிகளிடமிருந்து பித்ரா நிதி வசூல்
செய்து தாயகத்தில் செயல்படும் நமது TIYA வின் நிர்வாகிகளுக்கு அனுப்பிவைப்பது வழக்கம் அது போன்று 2016ஆம் வருடம்
வசூல் செய்த 4810 திர்ஹங்களுக்கு நிகரான ரூ-87,439.00 தாயக TIYA நிர்வாகிகளுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. சென்ற வருடத்தை போல் இந்த வருடமும் குவைத்தில் பணி புரியும் நமது முஹல்லா சகோதரர் பிச்சை
குட்டி என்கிற பாவா பகுருதீன் அவர்கள் பித்ரா நிதியாக 150 கிலோ அரிசியும் ரூ 5,000/- ரொக்கத் தொகையும் வழங்கினார். இவை இரண்டும் சேர்த்து
மொத்தத் தொகை ரூ 92.439/- அனுப்பி வைக்கப்பட்டது.
மேலத்தெருவில் வாழ்கிற தேவையுடைய ஏழை எளிய
மக்களுக்கு பெருநாள் தர்மமாக கீழ்க்காணும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். TIYA சார்பாக வழங்கப்பட்ட பெருநாள் தர்மத்தின்
மூலம் 183 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.
1. அரிசி 10 கிலோ, 2. சீனி 1 கிலோ, 3. கோல்டு வின்னர் ஆயில் 1 லிட்டர், 4. சேமியா 400 கிராம், 5. டால்டா 100 கிராம், 6. கறி மசாலா 50 கிராம், 7. ரோஸ் நெய் 50 கிராம், 8. பணம் 100 ரூ ரொக்கமாகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது.
குர்பானி தோல் வசூல்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் மஹல்லாவசிகளின் ஏகோபித்த ஒத்துழைப்போடும் நமது மஹல்லா இளைஞர்களின் துடிப்பான செயல்பாடுகளினாலும். ஒவ்வொரு ஆண்டும் நமது மஹல்லாவாசிகளிடம் குர்பானி தோல்களை திரட்டி அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு நமது மஹல்லாவில் உள்ள ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதந்தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது..

உடற்பயிற்சி மையம் அமைத்தல்
உடற்பயிற்சி மையம் ஒன்றை அமைத்துத் தருமாறு நமது முஹல்லா இளைஞர்கள் எழுப்பிய நீண்ட நாள் கோரிக்கை பரீசீலணைக்குப் பின் ஏற்கப்பட்டு 8 பில்லர்களுடன் கூடிய கட்டிடமாக எழுப்ப்பட்டு வருகிறது. இதுவரை இவ்வுடற்பயி’ற்சி மையத்திற்காக 2 லட்சம் ரூபாய் அளவில் பணிகள் இறைவன் கிருபையால் நடைபெற்று வரும் நிலையில் இக்கட்டிடம் முழுமையடைய மேலும் 4 லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. இப்பணி விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்வதுடன் உலகெங்கிலும் வாழும் நமது மேலத்தெரு முஹல்லாவாசிகள் இந்த உடற்பயிற்சி மையம் முழுமையடைய தாங்களால் முடிந்த பொருளாதார உதவிகள் செய்திடவும் வேண்டுகிறோம்.
உடற்பயிற்சி மையம் ஒன்றை அமைத்துத் தருமாறு நமது முஹல்லா இளைஞர்கள் எழுப்பிய நீண்ட நாள் கோரிக்கை பரீசீலணைக்குப் பின் ஏற்கப்பட்டு 8 பில்லர்களுடன் கூடிய கட்டிடமாக எழுப்ப்பட்டு வருகிறது. இதுவரை இவ்வுடற்பயி’ற்சி மையத்திற்காக 2 லட்சம் ரூபாய் அளவில் பணிகள் இறைவன் கிருபையால் நடைபெற்று வரும் நிலையில் இக்கட்டிடம் முழுமையடைய மேலும் 4 லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. இப்பணி விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்வதுடன் உலகெங்கிலும் வாழும் நமது மேலத்தெரு முஹல்லாவாசிகள் இந்த உடற்பயிற்சி மையம் முழுமையடைய தாங்களால் முடிந்த பொருளாதார உதவிகள் செய்திடவும் வேண்டுகிறோம்.
பாக்கியாத்துபள்ளிமினாரா
அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி மராமத்துப் பணி
அல்லாஹ்வின் உதவியால் சென்ற ரமலான் மாதத்தில் அல் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் பள்ளியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானித்தப்படி, பள்ளியின் மேல் தளத்திற்கு அலுமினிய ஷிட் கூரை போடுவது, பெயிண்ட் அடிப்பது, மனோரா வேலை மற்றும் சிற்சில மராமத்து வேலைகள் குறித்தும் அதன் பட்ஜெட் குறித்தும் நமது முஹல்லாவில் உள்ள சில சகோதர்களிடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நல்லுள்ளங்கொண்ட அந்த சில சகோதர்கள் மூலம் வந்த வரவு 4,50,000.00 (நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்கள். TIYA வின் ஒத்துழைப்போடு அப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
பெரியஜும்மாபள்ளி்மினாரா
மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மனோரா மற்றும் சுற்றுச்சுவர் மராமத்துப் பணி
மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியின் மனோரா மராமத்து பணி மற்றும் ஜனஸா அடக்குமிடம் சுத்தப்படுத்துதல் மற்றும் புதுக்குளம் பகுதியில் உள்ள கபரஸ்தான் சுற்றுச்சுவரை உயர்த்துதல் போன்ற பணிகள் TIYA வின் பங்களிப்புடன் மிகச்சிறப்புடன் செய்து முடிக்கப்பட்டன.
மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளியின் மனோரா மராமத்து பணி மற்றும் ஜனஸா அடக்குமிடம் சுத்தப்படுத்துதல் மற்றும் புதுக்குளம் பகுதியில் உள்ள கபரஸ்தான் சுற்றுச்சுவரை உயர்த்துதல் போன்ற பணிகள் TIYA வின் பங்களிப்புடன் மிகச்சிறப்புடன் செய்து முடிக்கப்பட்டன.

செடியங்குளம்
அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று மிகவும் பழமை வாய்ந்த செடியன் குளம். வரலாற்று சிறப்பு மிக்க இக்குளத்தை பொதுமக்கள் நீராடவும் பெருவாரியான மக்கள் கரையோரத்தை நடைபாதையாகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இக்குளத்தின் கரையோரம் 5 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் இருந்த போதிலும் அதில் எதிலும் நீண்டகாலமாக மின்விளக்குகள் பொருத்தப்படாததால் இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி காணப்பட்டது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் கடந்து சென்றனர். இதுகுறித்து அறிந்த TIYA அமைப்பின் சார்பில் வடக்கு மற்றும் தெற்கு பகுதி செடியன் குளக்கரைகளில் கரை பகுதி முழுவதும் ஒளிபடரும் வகையில் மின்விளக்குகள் இரண்டு பொருத்தப்பட்டு தற்போது அந்த பகுதியை இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்க செய்துள்ளது.

பெண்கள் கழிவ றை திறப்பு
கட்டிமுடித்து 7 வருடங்களாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்து வரும் கழிவறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உடனே திறந்துவிட வேண்டி வலியுறுத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், CM செல் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் TIYA சார்பாக கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டு நம் மனுவின் மீது ஒரு வார காலத்திற்குள் துரித நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

கழிவறை கோரிக்கை கோ
நமது மஹல்லாவில் உள்ள ஒரு ஏழையின் வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தால் ஒரு கழிவறை கட்டிதருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. எவ்வித வழிகளுமில்லாத காரணத்தாள் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு நமது அமீரக TIYA வின் தலைவர் மற்றும் துணை தலைவர் அகியோரின் பங்களிப்பில் TIYA வின் சார்பில் அந்த கோரிக்கையை நிறைவேற்றப்பட்டது.
கழிவுநீர் வடிகால் கட்டிதருமாறு வந்த கோரிக்கை
நமது முஹல்லாவிலுள்ள குட்டப்புற வீடு – தாயார் வீடு இடையிலுள்ள சந்தில் 17 வது வார்டின் முன்னாள் கவுன்சிலர் திருமதி. ரபீக்கா அவர்களின் முயற்சியால் இன்டர்லாக் ரோடு போடுவதற்கான பணிகள் துவங்கின, இதனால் அந்தப் பகுதியில் கழிவுநீர் செல்வதற்கான வழிகள் அடைபட்டது. இந்த கழிவுநீர் வடிகாலை புதிய ரோட்டிற்கு பாதிப்பில்லாத வகையில் குழாய் பதித்து கொண்டு செல்ல சுமார் 50,000 திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு இதில் 25,000 ரூபாயை ஏழ்மையான அந்தப் பகுதி மக்களே இணைந்து பங்களிப்பு செய்ததுடன் எஞ்சிய தொகைக்கு TIYAவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு எஞ்சிய தொகையான 25,000 வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.
மேலத்தெரு பெண்கள் பூங்காவில் மின்னொளி
நமது மேலத்தெருவில் அமைந்துள்ள பெண்கள் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் மின்விளகில் போதிய மின்னொளி இன்றி பூங்காவின் சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே கடந்து சென்றனர். இதுகுறித்து அறிந்து ( TIYA ) அமைப்பின் சார்பில் பூங்காவினுள் அமைந்துள்ள மின்கம்பத்தில் விளக்கு ஒன்று பொருத்தப்பட்டு, தற்போது பூங்கா முழுமையும், அவ்வழியும் மின்னொளியில் ஜொலிப்பதால் அப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
என்று அன்புடன்
TIYA
No comments:
Post a Comment