சென்னை புரசைவாக்கம் மில்லர் சாலையில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும்,
போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மில்லர் சாலையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஒரே பைக்கில்
ஒருவழிப் பாதை வழியாக வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு இருந்த போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தை
தடுத்து நிறுத்தியுள்ளனர். எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள் என
கேட்டுள்ளனர். அதற்கு விதி மீறி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் போலீசாருடன் மாணவர்கள் மூவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக
கூறப்படுகிறது. இது மோதலாக மாறியுள்ளது. மேலும் அயனாவரம் உதவி ஆணையர்
சங்கரனை கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சட்டக்கல்லூரி
மாணவர்கள் மூன்று பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக புரசைவாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி
முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில்
பதட்டம் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment