டிடிவி தினகரன் மற்றும் புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் நடுவேயான
உரையாடல்கள் வாட்ஸ்அப் மூலம் நடைபெற்றுள்ளதால் அதை கண்டுபிடிப்பது
போலீசாருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாம்.
இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கே மீட்டுக்கொடுப்பதாக கூறி டெல்லியில்
மோசடி பேர்வழி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் டிடிவி தினகரனிடம் பணம் பெற்ற
புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தினகரனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் இருவருமே
தொலைபேசியில் பேசிய தகவல் வெளியாகியிருந்தது.
சிக்கல்
ஆனால் தொலைபேசியில என்ன பேசிக்கொண்டனர் என்ற தகவலை மிகவும் துல்லியமாக
போலீசாரால் வெளிக்கொண்டுவர முடியவில்லை என்று, டெல்லியிலுள்ள சில
வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவிக்கின்றன.
சிக்காமல் தப்பு
விஞ்ஞானத்தோடு வீம்பா விளையாடுவதாக வருமே ஒரு திரைப்பட டயலாக் அது இந்த
விஷயத்திற்கு சரியாக பொருந்தும். ஏனெனில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க டிடிவி
தினகரன் மற்றும் சுகேஷ் இருவருமே வாட்ஸ்அப் மூலம் அழைப்புவிடுத்து
பேசியுள்ளனர்.
வாட்ஸ்அப் வசதி
வாட்ஸ்அப் Encrypted என்ற வசதியை பயனாளர்களுக்கு வழங்குகிறது. நீங்களே
யாருக்காவது சாட் செய்யும்போது அதை கவனித்திருப்பீர்கள். இந்த வசதியால்,
இரு நபர்கள் நடுவேயான சாட் மற்றும் அழைப்புகளை வேறு மூன்றாம் நபர்
கண்காணிக்க முடியாது. வாட்ஸ்அப் ஊழியர்களாலேயே அது முடியாது.
அரசங்கத்தாலும் முடியாது
நிலுவையிலுள்ளது
இதுபோன்ற ரகசிய பாதுகாப்பு, ஆபத்தை விளைவிக்கும் என கூறி கோர்ட்டில் வழக்கு
நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி போலீசாருக்கும், வாட்ஸ்அப்
கால்கள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டிடிவி தினகரனுக்கு எதிரான
ஆதாரங்களை திரட்டுவதில் போலீசார் சற்று தடுமாற்றம் அடைந்துள்ளதாக
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment