தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள
டிடிவி தினகரன் சிறைக்குப் போக நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என
நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா, தினகரனின் படுதீவிர ஆதரவாளராக உருமாறியிருக்கிறார் நாஞ்சில்
சம்பத். தினகரனை புனிதர் என்று ஓயாமல் புகழ்ந்து தள்ளி வருகிறார்.
அத்துடன் ஓபிஎஸ் வீட்டு வாசலில் தாம் நிற்க நேர்ந்தால் அப்போதே
தற்கொலை செய்து கொண்டு செத்து போய்விடுவேன் எனவும் ஒரு பேட்டியளித்து
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார் நாஞ்சில் சம்பத். இந்த நிலையில் தினகரன்
கைது செய்யப்பட்டது முதலே கொந்தளித்துக் கொண்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
இது தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நாஞ்சில் சம்பத் ஆலோசனை
நடத்தியிருக்கிறார். தற்போது தினகரன் போலீஸ் கஸ்டடியில் உள்ள நிலையில்
அவருக்கு ஜாமீன் வாங்கிவிடலாம் என்பது அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களின்
நம்பிக்கை.
இந்த ஆலோசனையின் போது உணர்ச்சிவசப்பட நாஞ்சில் சம்பத், தினகரன் மட்டும்
சிறைக்குப் போக நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியிருக்கிறார்.
அவரது இந்த பேச்சைக் கேட்டு தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏக்கள் அதிர்ந்து
போனார்களாம்.
No comments:
Post a Comment