பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர்கள்
மேற்கொண்டிருந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க
வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய
திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள காலி பணி
இடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
பத்திரப்பதிவுத்துறை, வணிகவரித்துறை, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள்,
வட்டாட்சியர்கள், உள்ளிட்ட 64 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப்
போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் நிதி அமைச்சர்
ஜெயக்குமார், பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வருவாய்த் துறை
அமைச்சர் உதயகுமார் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அரசு
ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அரசு ஊழியர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம்
தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர்
சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment