Latest News

  

உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு தமிழ் பெண்..!

 
பாலினப் பாகுபாடு நம் சமூகத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மூலையிலும் வியாபித்து இருக்கும் இக்காலத்தில், உலகின் நான்காவது பெரிய நிறுவனத்தின் மேல் நிலையை அடைந்த ஒரு பெண்ணின் கதையை நாம் இப்போது பார்ப்போம். இந்திரா நூயி, பெப்சிகோ வின் தலைமை நிர்வாக அதிகாரி, அமெரிக்கக் கனவுகளின் சாராம்சத்தை விளம்பரப்படுத்தக்கூடிய வெற்றிக் கதையின் கதாநாயகி. பெப்சி நிறுவனத்தின் மீது தமிழர்களுக்கு இருக்கும் எதிர்ப்பை தாண்டி, ஒரு தமிழ் பெண்ணின் வளர்ச்சியை பார்த்து நாம் வியக்க வேண்டும். இவர் கடந்து வந்த பாதையை எப்படிப்பட்டது தெரியுமா..? உங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது என்றால், நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் எதுவுமே ஒரு பொருட்டில்லை, உங்களின் தேவை எல்லாம் அக்கனவை அடைய மன உறுதியும் தீர்மானமும் மட்டுமே என்பதை நிரூபித்தவர், அவர். ஆண் ஆதிக்கம் நிறைந்த வர்த்தக உலகில் தனது கனவு பாதையில் வந்த தடைகளையும், எதிர்ப்புகளையும் உடைத்து எரிந்து இன்று வருடம் 66 பில்லியன் டாலர் வருமானத்த ஈட்டும் உலகளவில் இருக்கும் ஒரு வர்த்தக சாம்ராஜியத்தை தன் விரல் நுனி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
குழந்தைப் பருவம் மற்றும் ஆரம்பக் கால வாழ்க்கை இந்திரா நூயி 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 28 தேதி மதராஸில் ( இப்பொழுது சென்னை என அழைக்கப்படும் தமிழ்நாட்டின் தலைநகர்) ஒரு பழமைவாத தமிழ் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஹைதராபாத் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து வந்தார். அவரும் அவருடைய சகோதரியும் குழந்தை பருவத்திலேயே தாயினால் வளர்க்கப்பட்டவர்கள். அவர்களது தாயார் எப்போதும், வளர்ந்த பின் என்ன செய்ய விருப்பம் என அவர்களைக் கேட்டு சிறந்த பதிலுக்குப் பரிசும் வழங்குவார். இது இந்திராவை, வளர்ந்த பிறகு என்னவாக ஆகவேண்டும் எனக் கடுமையாகச் சிந்திக்கத் தூண்டியது


கல்வி அவர் மெட்ராஸில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் மெட்ராஸ் கிரிஸ்துவர் கல்லூரியில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவரது உறுதி மற்றும் விடாமுயற்சியால் கல்கத்தாவில் (மேற்கு வங்கத்தின் தலைநகரான தற்போது கொல்கத்தா என அழைக்கப்படும்) உள்ள மதிப்புமிக்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில், மேனேஜ்மெண்ட்டில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ பெற்றார். பிறகு, அவர் ஜான்சன் & ஜான்சன் மற்றும் மேட்டூர் பியர்ட்செல் நிறுவனங்களில் இரண்டு வருடங்கள் வேலை செய்தார்.

முதுநிலை பட்டம் பின்னர் உயர் கல்வி கற்க, சிறிய கையிருப்புடன் அமெரிக்காவுக்குச் சென்று யேல் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில் முதுநிலை பட்டம் பெற்றார். யேல் இல் தனது படிப்பினை தொடர , அவர் இரவு முழுவது வரவேற்பாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.

நேர்முகத்தேர்வில் நிராகரிப்பு தான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, தன் முதல் ஸூட்டை வாங்கி யேலில் முதுநிலைக்குப் பிறகு வேலைக்கான முதல் நேர்முகத்தேர்விற்கு அணிந்து சென்றார். அவரின் கால்சட்டை அவர் கணுக்கால் வரை இருந்ததால் அவர் அந்த நேர்முகத்தேர்வில் நிரகரிகப்பட்டார். மனம் தளர்ந்த அவர், தன் யேல் பேராசிரியரின் அறிவுரையின் படி அவருக்கு வசதியாக உள்ள உடையான புடவையை அடுத்தப் பெட்டிக்கு அணிந்து சென்று வேலையைப் பெற்றார் ! அவர் சிறு வயதிலேயே தான் யார் என்பதை அறிந்து, தன்னை அவ்வாறே வெளிப்படுத்திக்கொள்வதையும் கற்றார்.

ஆரம்பக் காலப் பணி அப்போது முதலே அவர் 'தன் இயல்பில் இருப்பது' என்ற தத்துவத்தைப் பின்பற்றி வருகிறார். அவர் பாஸ்டன் கன்சல்டிங் குரூப்பில் பணிபுரியத் தொடங்கினார். முதலில் அவர் ஒரு பெண் என்பதாள் அவருடைய மதிப்பு நிரூபிக்க அவரது ஆண் சகாக்களை விட அதிகம் உழைக்க வேண்டியிருந்தது இரண்டாவது, அவர் ஒரு அமெரிக்கரும் இல்லை. இவ்விரு காரணங்களுக்காக அவர் தரத்தில் எவ்வித சமரசமும் இன்றித் தன் சக ஊழியர்களை விட அதிகக் கடினமாக உழைத்தார்.

தொழில் வளர்ச்சி ஆனால் அவர் அத்துடன் தனது தொழில் வாழ்வின் வளர்ச்சியை நிறுத்திக்கொள்ளவில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் பெருநிறுவன மூலோபாயம் மற்றும் திட்டமிடல் துணைத் தலைவர் மற்றும் இயக்குநராக மோட்டோரோலாவில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஏசியா பிரவுன் பொவெரி யின் (சூரிச் தொழில்துறை நிறுவனம்) அமெரிக்க வணிகத்தைக் கையாண்ட மேனேஜ்மெண்ட் குழுவில் இருந்த பின்னர், அவர் 1994 ஆம் ஆண்டுப் பெப்சிகோவில் சேர்ந்தார்.

பெப்சிகோ வின் தலைமை நிதி அதிகாரி பல்வேறு பொறுப்புகளில் நிறுவனத்திற்குச் சேவை செய்து அவரது கடின உழைப்பில் மட்டுமே வளர்ந்து, பின்னர் 2001 ல் பெப்சிகோ வின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைவர் ஆனார். மேலும் அவர் இயக்குர் குழுவிலும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது. அவர் அந்தச் செய்தியை கேட்டவுடன் பெருமகிழ்ச்சியுடன் தான் குடும்பத்தாரிடம் பகிர விரும்பினார் (தாயார், கணவர் மற்றும் இரு மகள்கள்). வீட்டை அடைந்தவுடன் தன் அம்மாவிடம் ஒரு சிறந்த செய்தி பகிர இருப்பதாகச் சொன்னார். ஆனால் அவரின் அம்மாவோ மிகச் சாதாரணமாக அமைதியாக மறுநாள் தேவைக்குப் பால் வாங்கிவரப் பணித்தார். தலைமைத்துவத்தை வரையறுப்பதும் நல்ல தலைமை கிடைப்பதும் கடினம். ஆனால் உங்களால் மக்களை உங்களை எந்த எல்லைக்கும் பின்பற்ற வைக்க முடியும் என்றால், நீங்கள் ஒரு பெரிய தலைவர்." - இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி

சாதனைகள் மேல் நிலையை அடைவது ஒரு அமெரிக்கர் அல்லாதவருக்குக் கடினமான பணி, அதிலும் ஒரு பெண்ணாக இருத்தல் அதை விடக் கடினம்.. எந்த வேலை இடத்திலும் பொது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படும் அனைத்து உணர்ச்சி சமூக மற்றும் கலாச்சாரம் சார்ந்த போராட்டங்களையும் அவர் சந்தித்தார். ஒரு பணி புரியும் பெண்ணாக இருப்பது எளிதான பணி அல்ல என்பது இந்திரா நூயிக்கு மிக நன்றாகத் தெரியும். அவர் அண்மையில் ஒரு பேட்டியில் ஒரு பெண் எல்லாம் கிடைத்தது போல் பாசாங்கு செய்தாலும் எல்லாவற்றையும் பெற.முடியாது எனக் கூறினார்.

பெண்களுக்கு எழுச்சியூட்டும் பெண் ஆயினும், அவர் ஒரு மனைவி, ஒரு தாய், ஒரு மகள், மற்றும் ஒரு வெற்றிகரமான பணி புரியும் பெண்ணாக அனைத்துக் கோணத்திலும் நிரூபித்துள்ளார். இந்திரா நூயி வேலை இடங்களில் தினமும் போராடும் கணக்கில்லா இளம் பெண்களுக்கு எழுச்சியூட்டும் பெண். ஒரு பெண் அவள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்த ஒரு வெற்றிக் கதை.

குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இந்திரா நூயி தனது குடும்பத்துடன், கிரீன்விச், கனெக்டிகட், அமெரிக்காவில் வசித்து வருகிறார். ராஜ் கே நூயியை திருமணம் செய்து இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் அவர் கல்வி கற்ற யேல் பிசினஸ் ஸ்கூல்லில் கல்வி கற்கிறார். அவர் சைவ உணவு முறையைக் கடைப்பிடிப்பவர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.