முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு நிலையானது அல்ல என்றும் விரைவில்
தமிழகத்தில் பொதுத் தேர்தல் வரும் என்றும் தேமுதிக மகளிர் அணி தலைவர்
பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியின் வெல்லும் சொல் மெய்தேடும் பயணம் என்ற
நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி பின்தங்கிய தொகுதியாக இருப்பதற்கு திராவிட
கட்சிகள்தான் காரணம். ஏனேனில் கடந்த 50 ஆண்டுகளாக அவர்கள் தான்
எம்.எல்.ஏக்களாக இருந்துள்ளனர். ஆனால் தொகுதி வளர்சிக்கு எந்த
திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. இந்த நிலையில் பணம் பட்டுவாடாவால்தான்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா
செய்த ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் சிக்கியுள்ளன.பணம் கொடுத்ததாக
ஆர்கே நகர் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். அரசியல்வாதிகள் பொதுமக்களையும்
ஊழல்வாதிகளாக்கிவிட்டனர். தமிழகத்தில் வெகுவிரைவில் பொதுத்தேர்தல்
நடைபெறும்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் நடந்தது என்ன?
அவரது மறைவிலேயே மிகப் பெரிய மர்மம் இருக்கிறது என்று கூறினார். மேலும்
ஸ்டாலின் சட்டசபையில் ஆடை கிழித்ததாக வேஷம் போட்டதாகவும்
குற்றம்சாட்டினார். தமிழகத்தில் வெகுவிரைவில் பொதுத்தேர்தல் நடைபெறும்
என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
No comments:
Post a Comment