தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த 11 டி.எஸ்.பிக்கள்
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி.ராஜேந்திரன்
பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தி.நகர் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் அம்பத்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தி.மலை டி.எஸ்.பி அழகேசன் சென்னை மாநகர உதவி ஆணையராக மாற்றம்
மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் அசோக் நகருக்கு மாற்றம்
அம்பத்தூர் டிஎஸ்பி ஏ.பி செல்வன் தி.நகருக்கு மாற்றம்
அசோக்நகர் டிஎஸ்பி ஹரிகுமார் வணிக வரித்துறைக்கு இடமாற்றம்
மத்திய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன் ராஜபாளையம் டி.எஸ்.பியாக மாற்றம்
சென்னை மாநகர துணை ஆணையராக பணிபுரிந்து வந்த ராஜேந்திரன் காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோட்டூர்புரம் டிஎஸ்பியாக இருந்த ஆல்பர்ட் வில்சன் பூந்தமல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பூந்தமல்லி டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த முத்தழகு எழும்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த ராஜ காளீஸ்வரன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
எழும்பூர் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த பிரகாஷ் சேலம் எஸ்.சி. எஸ்.டி விஜிலென்ஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment