அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கசிந்தன. அதில் தொகுதி வாக்காளர்களுக்கு யார் மூலம், எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த தகவல் உள்ளது. பணம் வழங்குவோர் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் செங்கோட்டையன் உட்பட 6 அமைச்சர்களின் பெயர்கள் ஆவணங்களில் உள்ளன
ஆர்.கே. நகரில் ஒரு வாக்காளருக்கு ரூ.4000 கொடுக்க திட்டம் போடப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை மொத்தம், 2 லட்சத்து 62,721 ஆகும். இதில், 85% வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அப்படிப்பார்த்தால், 224,145 வாக்காளர்களுக்கு தலா ரூ.4000 ஆயிரம் என்று பார்த்தாலும், ரூ.89,65,80,000 செலவிடப்பட உள்ளதாக கணக்கு வருகிறது என்கிறார் அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன். இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜனும், இதே அளவு தொகையை குறிப்பிட்டு இதை வாக்காளர்களுக்கு அளிக்க தினகரன் டீம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment