பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என அவர்
குறிப்பிடுகிறாரா? என தருண் விஜய்யின் நிறவெறி கருத்து குறித்து காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம், தனது
டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளா
டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் தென் இந்தியர்கள் கருப்பர்கள் என்று கூறி
சர்ச்சையை கிளப்பிய பாஜக மூத்த தலைவர் தருண் விஜய்யை, காங்கிரஸ் கட்சியின்
மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.
தருண் விஜய்
நொய்டாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்ட
சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து
கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் தருண் விஜய், இந்தியர்கள் இன பாகுபாடு
பார்த்தால் எப்படி கருப்பான தென் இந்தியர்களுடன் சேர்ந்து வாழ முடியும் என
சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்தார்.
சர்ச்சை கருத்து
இந்தியர்கள் எப்படி இன பாகுபாடு பார்ப்பார்கள் என குறிப்பிட்ட தருண் விஜய்,
இந்தியாவில் இன பாகுபாடு இருந்தால் கருப்பாக இருக்கும் தென் இந்தியகளுடன்
நாங்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். அவரது
இந்த கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா கருணாநிதி
தருண் விஜய் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன்,
ஜெயலலிதாவும், கருணாநிதியும் கூட கலரானவர்கள்தான் என்று கூறினார்.
ப.சிதம்பரம் கண்டனம்
முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் தருண் விஜய் கருத்துக்கு கண்டனம்
தெரிவித்துள்ளார்.நாங்கள் கருப்பர்களுடன் வாழ்கிறோம் என தருண் விஜய்
கூறுகிறார், நான் அவரிடம் ஒன்று கேட்கிறேன்?, "நாங்கள்" என்றால் யார்?
"பாஜக, ஆர்எஸ்எஸ்-காரர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என அவர்
குறிப்பிடுகிறாரா? என ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில்
சாடியுள்ளார்.
அதிகரிக்கும் எதிர்ப்பு
தருண் விஜய் மீது கடந்த சில ஆண்டுகளாகவே ஒருவித மதிப்பு இருந்தது. அவர்
தனது அத்தனை மதிப்பையும் ஒரே ஒரு பேட்டியில் கெடுத்துக்கொண்டு விட்டார்.
கடந்த இரண்டு நாட்களாகவே அவருக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு
அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment