அதிராம்பட்டினம், அக்-12
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த மவ்லவி எம்.ஏ அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து இலங்கை மௌலவி காத்தான்குடி பௌஸ் அதிபர், அல்பலாஹ் குர்ஆன் மத்ரஸா பாணந்துறை அவர்களால் தொகுக்கப்பட்ட கட்டுரை 'விடிவெள்ளி ஆன்லைன்' என்ற இணையதளத்தில் வெளியாகியது. அன்னார் இன்று மாலை இலங்கை, காத்தான்குடியில் வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னார் ஆற்றிய இஸ்லாமிய மார்க்கப் பணி குறித்து அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த கட்டுரையை நன்றியுடன் அப்படியே எடுத்து இங்கு மீள் பதிவு செய்கிறோம்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலிருந்து தெற்காக ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அடைந்துவிடக் கூடிய அற்புதமான ஊரே காத்தான்குடியாகும்.
இவ்வூரின் இலட்சணத்துக்கு ஆணிவேராக அமைந்த கல்வித் தாபனம் மத்ரஸதுல் பலாஹ் அரபுக் கல்லூரியாகும். இக் கல்லூரி 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
காலியைப் பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனையை வாழ்விடமாகவும் கொண்ட மர்ஹும் அப்துல்லாஹ் ஆலிம் ஸாஹிப் அவர்கள் இதனை ஆரம்பித்து வைத்தார்கள். அன்று முதல் மார்க்க சட்டங்களையும் அல்குர்ஆன், அல்ஹதீஸ், தப்ஸீர் விரிவாக்கம் ஆகிய பாடங்களுடன் அரபு இலக்கண, இலக்கியம் அனைத்தும் பயிற்றுவிக்கப்பட்டன.
அதிபர்கள் விபரம்
இக் கல்லூரியின் ஆரம்ப அதிபராக காலியைச் சேர்ந்த மர்ஹூம் மௌலவி ஏ. அஹ்மத் ஆலிம் ஸாஹிப் அதன் பின்னர் அக்குறணையைச் சேர்ந்த மௌலவி எம்.ஏ.எம்.ஜே. ஸைனுல் ஆப்தீன் ஆலிம், காத்தான்குடியின் மூத்த உலமா மர்ஹூம் எஸ்.எம்.எம். முஸ்தபா (கப்பல் ஆலிம்) ஆகியோர் பிரதி அதிபராகக் கடமையாற்றினர்.
அதன் பின்னால் அதிபராக தென் இந்தியா அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்மது அப்துல்லாஹ் (ரஹ்மானி) அவர்கள் 1959 ஆம் ஆண்டு தனது கடமையைப் பொறுப்பேற்றார்கள். இவர்களது அயராத முயற்சியினால் காத்தான்குடியின் கண்ணாக மத்ரஸதுல் பலாஹ் விளங்க ஆரம்பித்தது.
பாட விரிவாக்கம்
‘தப்ஸீர்” அல்குர்ஆன் விரிவாக்கம், ‘பிக்ஹு” மார்க்க சட்டக் கலை நுணுக்கங்கள், ‘அகாயித்” சமய சித்தாந்தம், ‘தஸவ்வுப்” பண்பாட்டுக் கலை ‘உஸுல்” சட்ட மூலாதாரம், ‘லுகத்” அரபு மொழியறிவு, ‘நஹ்வு” சொற்புணர்ச்சி இலக்கியம் ‘ஸர்பு” சொல் இலக்கண ஞானம்.
‘இல்முல் பயான்” உரை இலக்கண ஞானம், யாப்பிலக்கணம், அளவியல் பேச்சு நுட்ப ‘மன்திகையும்'' இன்னும் இது போன்ற பல கலைகளையும் தாமாக முன்னின்று அப்துல்லாஹ் (ரஹ்மானி) ஆலிம் அவர்கள் அதிபராக போதகராகப் பயிற்றுவித்தார்கள்.
மௌலவி தராதரம்
இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சினால் 17.11.1959 இல் இம் மத்ரஸா பதியப்பட்டது. இதன் நிமித்தம் இதே ஆண்டு இக்கல்லூரியில் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி வசதியும் செய்யப்பட்டது. இதன் பின்னால் நாட்டின் நாலா பகுதிகளிலிருந்தும் மாணவர்களின் வருகை அதிகரித்தது. பயிற்றுவிப்புகளும் சீராக நடைபெற்றன.
இதற்கமைய மத்ரஸதுல் பலாஹ்வின் முதலாவது பட்டமளிப்பு விழா 18.01.1962 இல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முழு காத்தான்குடியும் கண்டு களிக்கும் அளவுக்கு ஊர்வலமாக மௌலவிமார் அழைத்து வரப்பட்டது அந்த நாட்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அல்குர்ஆன் மனன வகுப்பு
இலங்கையில் முதலாவது அல்குர்ஆன் மனன ‘ஹிப்ழ்” வகுப்பு மத்ரஸதுல் பலாஹ்வில்தான் முதலாவதாக 18.12.1971 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வகுப்பை தென் இந்தியா காயல் பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹூம் மௌலானா, மௌலவி அல் ஹாபிழ் ரீ.எம்.கே. செய்யித் அஹ்மத் (முத்து வாப்பா) ஆலிம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.
இந்த ‘ஹிப்ழ்’ பணிக்காக அதிபர் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்த மௌலவி ஹாபிழ் ஏ. ஹஜ்ஜி முஹம்மத் அவர்களை நியமித்தார்கள்.
அயராத முயற்சியின் காரணமாக 1975 ஆம் ஆண்டு அல்குர் ஆனின் 6666 வசனங்களையும் மனனம் செய்த ஹாபிழ்கள் குழு பட்டம் பெற்று வெளியேறினார்கள். இந்த ஹாபிழ்கள் எதிர்கால நலன்கருதி இதே மத்ரஸாவில் மௌலவி பயிற்சி நெறியையும் எட்டு வருடங்கள் முடித்து வெளியேறினார்கள்.
ஜாமிஅதுல் பலாஹ்!
மத்ரஸதுல் பலாஹ் என்ற பெயரில் இயங்கி வந்த இக்கல்லூரி 1974 ஆம் ஆண்டு ‘நூறுல் பலாஹ்’ என்ற இருபதாண்டுப் பூர்த்தி விழா மலர் ஒன்றை வெளியிட்டது. அப்போது நான் இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயில்கின்றேன்.
எனது இலக்கிய ஆர்வத்தைப் பயன்படுத்தி ‘முத்தான குர்ஆன் ’ என்ற கவிதையை மலருக்கு எழுதினேன். இம்மலரின் ஆசிரியராக மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி செயற்பட்டார்.
இந்த மலரின் பின்னர் ஏற்பட்ட விழிப்புணர்வால் 1983 ஆம் ஆண்டு இக் கல்லூரி மத்ரஸதுல் பலாஹ் என்ற பெயரை மாற்றி “ஜாமிஅதுல் பலாஹ்” எனும் பெயரில் உயர் கலாபீடமாக மாற்றப்பட்டது.
இங்கு வெளியேறிய மௌலவிமார் வெளிநாட்டு ஜாமிஆக்களில் கல்வி பயில்வதற்கு இந்த ஜாமிஆ என்ற மாற்றம் முக்கியமாகத் தேவைப்பட்டது.
இன்றும் பல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஜாமிஅதுல் பலாஹ் மாணவர்கள் உயர்கல்வி பெற்று வெளியேறியுள்ளனர். அது மாத்திரமன்றி இங்கு பட்டம்பெற்று வெளியேறிய ஹாபிழ்கள் முஸ்லிம் நாடுகளில் நடைபெற்ற அல்குர்ஆன் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்களை சுவீகரித்துள்ளனர்.
கல்விச் செயற்பாடுகள்!
ஜாமிஅதுல் பலாஹ்வில் தனி அரபை மாத்திரம் பயிற்றுவிக்காது அல் ஆலிம் பரீட்சைக்குரிய பாடங்களும் தமிழ், கணிதம், சமூகக் கல்வி, ஆங்கிலம், உருது போன்ற மொழிகளும் பாடங்களும் பயிற்றுவிக்கப்பட்டது.
தற்போது கல்வி விரிவாக்கலை மையமாகக் கொண்டு அரசாங்க பாடத் திட்டத்தோடு இணைந்து தரம் 8 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. சாதாரணம், க.பொ.த. உயர்தரம் வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மேலதிகமாக கணனி செயற்பாட்டு கருத்தரங்குகள், பயிற்றுவிப்புகளும் முறையாக நடைபெறுகின்றன.
ஒரு வருடத்தில் அரையாண்டுப் பரீட்சை வருட இறுதிப் பரீட்சைகள் நடைபெறும். கல்விக் காலம் முடியும்போது மௌலவிப் பரீட்சைத் தகுதிகாண் உலமாக்கள் மூலம் நடத்தப்படுகின்றது.
விசேட விரிவுரையாளர்கள்
அதிபர் மௌலானா மௌலவி எம்.ஏ. முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் (ரஹ்மானி) அவர்களுடன் வெளிநாட்டு இஸ்லாமிய பட்டதாரிகளும் பங்கேற்றனர்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த அல்லாமா மௌலானா அஹ்மத் அப்துல் ஹமித், பாகிஸ்தானைச் சேர்ந்த அல்லாமா மௌலானா மக்சூத் அஹ்மத், மௌலானா நூர் இலாஹி போன்றவர்களுடன் உப அதிபராக மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) யுடன் விரிவுரையாளர்களாக மௌலவி பீ.எம்.எம். ஹனீபா (பலாஹி), மௌலவி ஏ.ஜீ.எம். அமீன் (பலாஹி), மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி), மௌலவி எம்.வை. ஸைனுதீன் (பலாஹி மதனி), மௌலவி எம்.எம். அப்துர் ரஹீம் (பலாஹி), மௌலவி ஏ.ஆர். நிஸார் (பலாஹி), மௌலவி எம்.எம். கலாமுல்லாஹ் (றஷாதி), மௌலவி எம்.ஐ. அப்துல் கபூர் (பலாஹி மதனி), மௌலவி ஏ.எம். அலியார் (பலாஹி றியாழி) ஆகியோருடன் ஹிப்ழ் பிரிவுக்காக மௌலவி ஹாபிழ் ஏ.எஸ்.எம். ஜின்னாஹ் (பலாஹி), மெளலவி ஹாபிழ் என்.எம். அப்துல் அஹத் (ஷர்கி) ஹாபிழ் எஸ்.எம். கலந்தர் லெப்பை போன்றவர்களும் புதிய பல முகங்களும் தொண்டாற்றினார்கள்.
ஜாமிஅதுல் பலாஹ்வின் உயர்படியான முன்னேற்றத்திற்குக் காரணமாக அன்றும் இன்றும் சிரமம் பார்க்காது உழைத்த நிருவாக சபையினரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இக்கல்லூரிக்காக உதவி செய்த உள்ளூர், வெளியூர் மக்களையும் காத்தான்குடி கல்வி உலகம் மறக்கமாட்டாது என்பது உண்மை.
‘ஷைகுல் பலாஹ்”வின் வாழ்வியல்
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அதிபர் மௌலானா மௌலவி ‘ஷைகுல் பலாஹ்” எம்.ஏ. அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்கள் தென்னிந்தியா, தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினத்தில் 21.03.1932 இல் பிறந்தார்கள்.
இவர்களின் தந்தை அல்லாமா அல்ஹாஜ் முகம்மது அபூபக்கர் ஆலிம் ஆவார்கள்.
இப்பெரியார் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மஹரகம மத்ரஸதுல் கபூரிய்யா அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்கள்.
1955 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை அட்டாளைச்சேனை ஷர்க்கியா அரபுக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி பின்னர் இந்தியாவில் கீழ்க்கரை, காயல்பட்டினம் போன்ற இடங்களில் கல்விப் பணியாற்றினார்கள். இவர்கள் உலமாக் குடும்பமாகும்.
தந்தை வழியே தனயன்
தந்தை அபூபக்கர் ஆலிம் ஷாஹிப் போன்று தனயனான மௌலானா மௌலவி அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களும் ஆலிமாக வெளிவருவதற்காக சொந்த ஊர் அதிராம்பட்டினத்தில் மத்ரஸதுல் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் சேர்ந்தார்கள்.
தந்தை அபூபக்கர் ஆலிம் அவர்களின் ஆசியோடும் அன்புத் தாயார் நபீஸா உம்மா ஆகியோரின் துஆவோடும் பாடசாலை வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
கல்விமான்களான அல்லாமா அஸ்ஸெய்யிது அலவி தங்கள் அஷ்ஷைகு அஹ்மது கபீர், அல்லாமா முகம்மது முஸ்தபா (பாகவீ), மௌலானா மௌலவி எம்.எஸ்.எம். நெய்னா முஹம்மது ஆலிம் போன்ற மேதைகளிடம் கால்மடித்து கல்வி பயின்றார்கள். 01.04.1954 ஆம் ஆண்டு ரஹ்மானி பட்டத்துடன் மத்ரஸா வாழ்க்கையை முடித்து வெளியேறினார்கள்.
ஆரம்ப ஆசிரியர் பணி
ஆரம்ப ஆசிரியர் பணியை அதிராம்பட்டினம் அல் மத்ரஸதுல் ஸலாஹிய்யாவில் அதிபராகப் பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் நலமாக நடத்தினார்கள். அதன் பின்னர் தனது தந்தையுடன் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் 03.05.1958 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து அட்டாளைச்சேனை அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.
பின்னர் காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபுக் கல்லூரிக்கு தகுந்த விரிவுரையாளர் தேவைப்பட்டதால் 13.10.1959 ஆம் ஆண்டு உப அதிபராக காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ்வில் கடமையைத் தொடர்ந்தார்கள். இவர்களின் வருகையால் இக்கலையகம் அறிவியல் ஒளிபெற்றுத் திகழ்ந்தது.
இல்லறம்
அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அதிராம்பட்டினம் செ.மு.க. நூறு முஹம்மது மரைக்காயர் அவர்களின் புதல்வி உம்முல் பஜ்ரியா அவர்களை 02. 09. 1961 ஆம் ஆண்டு மணமுடித்தார்கள்.
இந்த இனிய வாழ்வில் மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். முறையே மூத்த புதல்வர் முஹம்மது ரஹ்மதுல்லாஹ். அடுத்தவர் முஹம்மது முஸ்தபா, மூன்றாம் மகன் முஹம்மது பறக்கத்துல்லாஹ் ஆவார்கள்.
நீண்ட நாட்களின் பின்னர்தான் தனது மனைவி, பிள்ளைகளை அப்துல்லாஹ் ஹஸ்ரத் பார்க்கச் செல்வார்கள்.
தொலைபேசி வசதிகள் சீர் இல்லாத காலத்தில் கடிதத் தொடர்புடன் மாத்திரம் தனது உற்றார் உறவினருடன் தொடர்பு வைத்து தனது வாழ்நாளை ஜாமிஅதுல் பலாஹ்வின் சேவைக்காக அர்ப்பணித்த அற்புத மனிதரின் இல்லற வாழ்வின் பிந்திய பக்கம் தனது அன்புக்குரிய மனைவி பஜ்ரிய்யா அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்.
சோராத மனத்திறன்
முஃமீன்கள் சோதிக்கப்படுவார்கள் என்பதற்கிணங்க சங்கைக்குரிய உஸ்தாத்னா ஷைகுல் பலாஹ் அல்லாஹ்வின் சோதனைக்குள்ளாகிய போதும் சோர்ந்து போகாமல் தனது பிள்ளைகளைக் கல்விமான்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
தனது மூத்த புதல்வர் முஹம்மது ரஹ்மதுல்லாஹ்வையும் இளைய புதல்வர் பறக்கத்துல்லாஹ்வையும் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் கல்வி பயில வழி செய்தார்கள். அதன் சிறப்பாக 1991 ஆம் ஆண்டு ரஹ்மதுல்லாஹ் மௌலவி பட்டம் பெற்று பின்னர் வாழைச்சேனை ‘குல்லியதுன் நஹ்ஜதில் இஸ்லாமிய்யா’ அரபுக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றுகின்றார். இவர் பன்னூலாசிரியராகத் திகழ்கின்றார்.
உஸ்தாத்னாவின் இரண்டாவது மகன் முஸ்தபா. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்து அண்மையில் தாருல் பகாவை அடைந்து விட்டார். மூன்றாவது மகன் முஹம்மது பறக்கத்துல்லாஹ்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இயங்கும் ‘ஜாமிஆ மதீனத்துல் இல்ம்” கல்லூரியில் அல்ஹாபிழ் பட்டம் பெற்று காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் மௌலவி பட்டப் படிப்பைத் தொடர்ந்து இதே கல்லூரியில் போதனாசிரியராகக் கடமையாற்றுகின்றார்.
உஸ்தாதுனா அவர்களுக்கு ஏற்பட்ட சோதனை என்பது 55 வருட காலமாக பெற்ற தாயை பிறந்த பொன்னாட்டை உற்றாரை, உறவினரை, சுற்றத்தாரைப் பிரிந்து கடல் கடந்து வந்து கல்விப் பணியாற்றிய அன்னார் சொந்த ஊரில் தங்கிய காலம் கொஞ்சம்தான். அப்படி இருந்தும் அன்பு மனைவியாரும் மரணித்து இறையடி சென்றுவிட்டார்கள். வாழ்வே சோதனையானது.
ஹஸ்ரத்தின் கல்வியூற்று
அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களிடம் காணப்பட்ட கல்வியின் ஊற்று பரம்பரை அறிவியலின் தாக்கமாகும். இந்திய நாட்டின் மலையாளப் பிரதேசம் கொச்சிப்பட்டணத்தை தாயகமாகக் கொண்ட அஷ்ஷைகு கோஜா அலவி அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்களே ஒரு பெரிய கல்வி மகானாகும்.
அது மாத்திரமின்றி இந்தியா தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் அறிவுப்பட்டணத்திலேயே பிறந்தார்கள். இங்கு அறிஞர்களை மிகவும் மதிப்பார்கள்.
அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் பாட்டனார் அல்லாமா ஷேகு அப்துல் காதிர் சூபி அவர்களாவார்கள். இவர்கள் ஆக்கிய நூல்கள் தான் முஹிம்மாதுல் முத்அல்லிமீன், அஹ்ஸனுல் மவாஇழ், மஜ்மூஉல் கவாயித் தோன்றவையாகும்.
இந்த அற்புத நூலாசிரியரின் பேரன்தான் அப்துல்லாஹ் ஹஸ்ரத் என்றால் அவர்களின் அறிவின் கருவூலத்தைக் கேட்கவும் வேண்டுமா?
இத்தகைய மதிப்புள்ள ஊரின் மகான் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள், இலங்கை மண்ணில் ஆற்றிய பணிகளைச் சமுதாயம் மறந்துவிட முடியாது.
பன்முகத் தன்மை!
எதையும் சமுதாயத்துக்காகச் சிந்திக்கின்ற தன்மை மௌலானா மௌலவி அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களிடம் காணப்பட்டது. தனக்கென இல்லாமல் பிறருக்காக யோசிக்கின்ற மனப்பான்மை அவர்களின் பரம்பரை வழியாகும்.
இதனை சற்றுப் பார்ப்போமானால் இலங்கைத் தலைநகர் கொழும்பு 2 ஆம் குறுக்குத் தெரு சம்மாங்கோட்டார் ‘ஜாமிஉல் அழ்பர்’ பள்ளிவாயலைக் கட்டுவதற்கு நிலம்கொடுத்து அதனை அழகாகக் கட்டி முடித்தவர்கள் அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் பாட்டனார் அப்துல் காதிர் ஆலிம் ஸாஹிப் அவர்களையே சாரும்.
இந்தப் பரம்பரையினர் இன்றுவரை இப்பள்ளியை நிருவகிப்பதும் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களும் இப்பள்ளியில் பிரதான நிருவாகியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆத்மீக வாழ்க்கை!
மௌலானா மௌலவி அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் ஒரு அறிவாளி மட்டுமல்ல ‘ஆபித்’ வணக்கவாளியும் ஆவார்கள்.
12.12.1969 ஆம் ஆண்டு அன்புத் தாயுடன் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிய அன்னார் பல ஹஜ்ஜுகளையும் உம்றாக்களையும் நிறைவு செய்ததுடன் தஹஜ்ஜுத், வித்ர், லுஹா, அவ்வாபீன் போன்ற தொழுகைகளையும் தவறாது தொழக்கூடிய சிறந்த ஆபிதாவார்கள். அவர்களின் அமல் அவர்களின் அகமாகியது. இதுவே அவர்களின் முகப் பிரகாசமாகியது.
ஹஸ்ரத்தின் கடைசி அவா!
ஜாமியதுல் பலாஹுக்காக இயக்குனர் சபையில் உழைத்த முஹம்மது காசிம் ஹாஜியார் அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஜே.பி. , அப்துல் கபூர் ஆலிம் ஹாஜியார், எம்.ஐ.ஏ. முகைதீன் ஜே.பி. ,ஆதம் லெப்பை ஹாஜியார், இப்றாஹீம் ஹாஜியார், இஸ்மாயில் ஹாஜியார், முஸ்தபா ஜே.பி. (காழியார்), எம்.பி. மஜீத் ஹாஜியார் ஜே.பி., அசனார் ஹாஜியார், அல்ஹாஜ் மௌலவி ஜுனைத் (பலாஹி), மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) , மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி, அல்ஹாஜ் கே.எம்.ஏ.எம். சலீம் பீகொம், மௌலவி ஏ.எல்.எச். பதுறுத்தீன் பலாஹி, மௌலவி ஏ.எம். அலியார் (றியாழி),எம்.எஸ். அப்துல் அஸீஸ், கே.எம்.எம். கலீல், அல்ஹாஜ் எம். சம்சுத்தீன், ஈ,எல். முஸ்தபா, ஏ.எல். அப்துல் ஜவாத் பீ.ஏ. (சட்டத்தரணி), எம்.எல்.ஏ. முகைதீன், எம்.எஸ்.எம். அமீர், மௌலவி எம்.ஐ.எம். முபாறக் (பலாஹி), ஏ.எல். பதுறுத்தீன், என்.எம். எம். முபாறக், எம்.ஐ.எம். முனீர் ஆகியோருடன் இன்றைய ஜாமிஆ தலைவர் மௌலவி ஏ.எம். அலியார் (றியாழி), எஸ்.எல். அலியார் பலாஹி (காதி நீதிபதி), எம்.ஐ.எம். முகைதீன் ஹாஜியார் போன்ற உதவித் தலைவர்களுக்கும் நன்றி கூறி, துஆ செய்வதுடன் 2015 வரை ஜாமிஆவில் இருந்து வெ ளியேறிய 404 உலமாக்களுக்கும் 377 ஹாபிழ்களுக்கும் துஆ செய்து, ஸலாம் கூறி, ஞாபகம் வருவதும் போவதுமான நிலையில் காத்தான்குடி ஜாமிஆ அறையில் தொழுத வண்ணமும் ஓதிய வண்ணமும் துஆ செய்த வண்ணமும் அமல்களில் ஈடுபட்ட வண்ணமிருக்கிறார்கள்.
முழு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உதாரண புருஷரான அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் சேவையை அல்லாஹுத்தஆலா கபூல் செய்வானாக! ஆமீன் யாறப்பல் ஆலமீன்!!
மௌலவி காத்தான்குடி பௌஸ்
அதிபர், அல்பலாஹ் குர்ஆன் மத்ரஸா பாணந்துறை

நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment