காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வன்முறையில் ஈடுபட்டதாக 1,339
பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்
வன்முறையின் போது செல்பி எடுத்துக் கொண்டதன் மூலமாகவே போலீசாரிடம்
சிக்கியது தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் கடந்த மாதம் பெரும் கலவரம்
ஏற்பட்டது. கன்னட அமைப்புகள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களின்
வாகனங்கள், கடைகள் போன்றவை கொளுத்தப்பட்டன. இருமாநிலங்களுக்கு இடையேயான
போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த வன்முறை தொடர்பாக 1,339 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால், இவர்கள் கைது செய்யப்படக் காரணமான சாட்சி தான் வித்தியாசமானது.
செல்பி புள்ள...
அதாவது வன்முறையின் போது கடைகளை அடித்து நொறுக்கி, வாகனங்களை தீயிட்டு
கொளுத்திய வன்முறைக்காரர்கள் பலர் செல்பி மோகத்தால், கையில் ஆயுதங்களுடன்
சம்பவ இடத்திலேயே செல்பி எடுத்துக் கொண்டனர்.
செல்பி புள்ள...
அதாவது வன்முறையின் போது கடைகளை அடித்து நொறுக்கி, வாகனங்களை தீயிட்டு
கொளுத்திய வன்முறைக்காரர்கள் பலர் செல்பி மோகத்தால், கையில் ஆயுதங்களுடன்
சம்பவ இடத்திலேயே செல்பி எடுத்துக் கொண்டனர்.
போலீசார் அதிரடி...
கர்நாடக வன்முறையின் போது இது போல் 120 போட்டோக்கள், 28 வீடியோக்கள்
போலீசாரிடம் சிக்கியதாம். அதன் அடிப்படையில் தான் தற்போது ஆயிரத்திற்கும்
மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
159 வாகனங்கள் சேதம்...
இந்த வன்முறையின் போது 159 வாகனங்கள், 37 கடைகள்
சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும்,49 காவல்துறையினர்கள், 17 பாதுகாப்பு
படையினர்களும் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment