அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா
நடராஜன் முயற்சிப்பதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி
சசிகலா புஷ்பா குற்றம்சாட்டியிருந்தார். தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ
ஏடான நமது எம்.ஜி.ஆர்., சசிகலா புஷ்பாவை மிகக் கடுமையாக விமர்சித்து
கட்டுரை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் பேசிய சசிகலா புஷ்பா,
சசிகலா நடராஜனை கடுமையாக தாக்கியிருந்தார். மேலும் ஜெயலலிதாவின் போலி
கையெழுத்து மூலம் அதிமுக துணைப் பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்படலாம்
எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சாக்கடை புஷ்பாவின் 'பூக்கடை' சமாசாரங்கள் என்ற தலைப்பில்
நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் 'சித்ரகுப்தன்' என்ற பெயரில் சசிகலா புஷ்பாவை
விமர்சித்து ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எச்சையே! உனக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை பிச்சை யிட்டது யார்?
ஆனால், பகையாளியோடு உறவாடி, கூர்தீட்டிய மரத்திற்கு குந்தகம் செய்கிறது நன்றிகெட்ட உன் நடத்தை.
போலி கையெழுத்து, போலி படிப்பு, போலி புருஷன்... என்பதுதான்
பொழுதெல்லாம் உன் கூலிப் பிழைப்பு என்பதால் கள்ளமில்லா ஓர் நட்பை களங்கம் செய்கிறாய்.
"செந்நெல் மணி அரிசி, சீரகச் சம்பாவை உண்ணத் தருவேன்,
உயிர் தருவேன், ஆனால் ஒரு நெல் மணியைக்கூட
பரங்கியனுக்கு வரியாக கொடுக்க மாட்டேன்"
என்றே போராடி மடிந்த பூலித்தேவன் போல்,
ஆயிரமாயிரம் இன்னல்களை அரக்கர்கள் ஏவியபோதும் இறையடி நிழல் அகலா உறுதியில்
இறையடியார் உறவாகிய பக்தியில் தம்மையே ஒப்படைத்துக் கொண்ட தன்னலம் துறந்த
வாழ்வை இழிவாக பழிக்கிறாய்...
உன்னைப் போன்ற இழிபிறவி என்றே கருதிக் கொண்டு இட்டுக்கட்டி விளிக்கிறாய்!
கருணா வகுத்துக் கொடுத்த திட்டப்படி கடிதாசிகள் எழுதி பொம்பள எட்டப்பன் நீ
என்பதை உலகுக்கே ஊளையிட்டு உணர்த்து-கிறாய்.
மொத்தத்தில் சாக்கடை புஷ்பாவின் பழைய 'பூக்கடை சமாச்சாரங்'களை தோண்டி
எடுக்க நீயாக முன்வந்து தூண்டு-கிறாய்.
கழகத்தால் உயர்ந்துவிட்டு, கழகத்துக்கே கடுந்-துரோகம் இழைத்துப் போனவர்கள்
வெகுநாட்கள் பொதுவாழ்வில் நீடித்ததில்லை!
அவர்கள் விலாசமற்று வீழ்ந்ததே வரலாறு என்பதை விரைவில் நீயும் காண்பாய்.
அதுவரை, ஆடும் வரை ஆடு!
அலைக்கற்றை கும்பல் போடும் ஜதிக்கு ஆலாபனை பாடு!
'திரி நெருப்பு ஆடுவது அணைந்து போக,
தீயோர் சிரிப்பது தீர்ந்து போக'
என்பதை விரைந்து வரும் காலம் உனக்கு சத்தியமாய் உணர்த்தும்.
அதுவரை தீயசக்தி கூட்டத்தின் சுதிக்கேற்ப சொரணை கெட்ட ஜென்மமே உருண்டு
புரண்டு ஆடு!
இவ்வாறு அந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment