தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் நியமிக்க வேண்டும் என்ற திமுக
பொருளாளர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உடல்நலம்
பாதிக்கப்பட்ட பின்னர் திமுக முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்துக்குமே
திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நலம் குறித்து முழுமையான தகவல்கள்
வெளியாகவில்லை.
இதனால் வதந்திகள் ரெக்கை கட்டி பறந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகைப்படத்தை
வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி இருந்தார்.
கருணாநிதிக்கு எதிர்ப்பு
ஆனால் இந்த கோரிக்கையை திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் எதிர்த்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரின் புகைப்படத்தை வெளியிடக் கூடாது என்று
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கடுமையாக கூறியிருந்தார்.
ராகுல் வருகை
இதன்பின்னர் திடீரென காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகை
தந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அவர் விசாரித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு
உண்டு எனக் கூறியிருந்தார்.
ஜெ.வுக்கு ஆதரவு
தமிழக அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை பாஜக அமல்படுத்தக் கூடும் எனக்
கூறப்பட்டு வந்தது. அந்த நிலையில் அதிமுகவை காங்கிரஸ் ஆதரிக்கும் என
கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்டாலினுக்கும் எதிர்ப்பு
தற்போது தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வர் தேவை என திமுக பொருளாளர் முக
ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ஆனால் திருநாவுக்கரசரோ, பொறுப்பு முதல்வர்
தேவையில்லை. அதுபற்றி எல்லாம் அதிமுகதான் முடிவெடுக்கும் என அதிமுகவின்
குரலிலேயே பேசிவருகிறார்.
அதிமுக கூட்டணியில்?
தொடர்ந்து திமுகவுக்கு எதிராக திருநாவுக்கரசர் கருத்து கூறி வருகிறார்.
இதனால் திமுக கூட்டணிக்கு டாட்டா பைபை சொல்லிவிட்டு அதிமுகவுடன் காங்கிரஸ்
கை கோர்ப்பது வெகுதொலைவில் இல்லை என்றே கூறப்படுகிறது.
No comments:
Post a Comment