தமிழகத்திற்கு உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை
நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை
விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்று
தெரியவில்லை. இந்த நிலையில் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க
வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் தஞ்சையில்
நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நிறைவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும்,
திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினும் கூட இந்தக் கோரிக்கையை முதல் முறையாக
எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் அதே கோரிக்கையை எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது
தமிழகத்திற்கு உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க
வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்தார்.
காவிரி தொழில்நுட்ப உயர் மட்டக் குழு வருகை குறித்த கேள்விக்கு, காவிரி
தொழில்நுட்ப உயர் மட்டக் குழு தமிழக விவசாய சங்கங்களை கலந்து
ஆலோசிக்கவில்லை. எனவே இந்த குழுவின் வருகையால் எந்த பலனும் இருக்கப்
போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment