காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்குள் சென்று மனு
கொடுக்க அனைத்து அதிமுக எம்.பிக்களும் அனுமதி மறுத்து ஒட்டுமொத்த
தமிழகத்தையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவமதித்துள்ளது.
தமிழக மக்களின் பிரதிநிதிகளாகிய தங்களை நடுத்தெருவில் மத்திய அரசு நிற்க
வைத்தததால் அதிமுக எம்பிக்கள் கொந்தளித்து போயினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற
உத்தரவு. இந்த உத்தரவை ஏற்பதாக முதலில் மத்திய அரசு தெரிவித்தது.
பின்னர் திடீரென மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில்
மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இது தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
திடீர் பேரணி
இந்த நிலையில் டெல்லியில் அதிமுகவின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள்
அனைவரும் ஒன்று திரண்டனர். நாடாளுமன்ற அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை
நடத்திவிட்டு பின்னர் பேரணியாக பிரதமர் அலுவலகம் நோக்கி அனைத்து அதிமுக
எம்.பிக்களும் புறப்பட்டுச் சென்றனர்.
தடுத்து நிறுத்தம்
பிரதமர் அலுவலகம் அருகே அனைத்து அதிமுக எம்.பிக்களும் தடுத்து
நிறுத்தப்பட்டனர். தம்பித்துரை உள்ளிட்ட சில எம்.பிக்களுக்கு மட்டுமே உள்ளே
செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
மல்லுக்கட்டிய எம்பிக்கள்
ஆனால் மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் அனைவரையும் பிரதமர் அலுவலகத்துக்குள்
அனுமதிக்க வேண்டும் என்று நடுத்தெருவில் நின்றபடி அதிமுக எம்பிக்கள்,
பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினர்.
ஒட்டுமொத்தமாக அவமதிப்பு
பிரதமர் அலுவலக அதிகாரிகளோ, அதிமுக எம்பிக்களை மதிக்காமல் தொடர்ந்தும்
நடுத்தெருவிலேயே நிற்க வைத்தனர். ஒட்டுமொத்த தமிழகத்தையே அவமதிக்கும்
வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடந்து கொண்டது அதிமுக
எம்பிக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.



No comments:
Post a Comment