திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று காலையில் கவுன்சிலர் வெட்டிக் கொலை
செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளுர்
மாவட்டம், திருத்தணி அதிமுக 13வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்த
ஆறுமுகத்தை இன்று காலை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சாலையில் ஓட ஓட
விரட்டி கொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார்.
இதனால் திருத்தணியில் கடைகள் அடைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், அதிமுகவினர் திடீரென
ஒன்று கூடி, கவுன்சிலர் ஆறுமுகத்தின் கொலையைக் கண்டித்து சாலை மறியலில்
ஈடுபட்டனர். அப்போது, சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை கலைக்க போலீசார்
முயற்சி செய்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாத அதிமுகவினர் போலீசாருடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, டி.எஸ்.பி. ஈஷ்வரனை அதிமுகவினர்
தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் மீது போலீஸ்
தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம்
நிலவி வருகிறது.
No comments:
Post a Comment