முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க துணைவியார் ராஜாத்தி
அம்மாளை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்ப திமுக தலைவர் கருணாநிதி முதலில்
தயக்கம் காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்பல்லோ மருத்துவமனைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சென்று
ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். அப்பல்லோவுக்கு
நேற்று முன்தினம் இரவு திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி
அம்மாள் சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தது பரபரப்பை
ஏற்படுத்தியிருந்தது.
அப்பல்லோவில் சசிகலாவுடன் 45 நிமிடம் ராஜாத்தி அம்மாள் பேசிக்
கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
போதே, ஜெயலலிதா ஒரு பெண் என்பதால் நமது குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்
அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க செல்ல வேண்டும் என கருணாநிதியிடன்
ராஜாத்தி அம்மாள் கூறியிருக்கிறார்.
ஆனால் கருணாநிதியோ இதற்கு அனுமதி தர தயக்கம் காட்டியிருந்தாராம்... 'நாம்
அங்கு சென்றால் அதிமுகவினர் எப்படி அதை எடுத்துக் கொள்வார்களோ' என கேள்வி
கேட்டு அமைதிப்படுத்தியிருந்தாராம்.
பின்னர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து சென்ற
நிலையில் கருணாநிதியும் ராஜாத்தி அம்மாளை அப்பல்லோ செல்ல அனுமதித்தாராம்.
இதையடுத்து சசிகலா நடராஜன் தரப்புக்கு ராஜாத்தி அம்மாள் வர விரும்பும்
தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. முதலில் சசிகலா நடராஜனும் சற்றே
யோசித்துவிட்டு பின்னர்தான் 'சரி வாருங்கள்' என ஒப்புதல் தெரிவித்தாராம்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ
மருத்துவமனைக்கு சென்று சசிகலாவை சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து
விசாரித்திருக்கிறார். சசிகலா நடராஜன் - ராஜாத்தி அம்மாளின் சந்திப்பு
அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment