திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை அப்பல்லோவில்
சந்திக்க சசிகலா நடராஜன் ஒப்புக் கொண்டதன் பின்னணி குறித்து பல்வேறு
தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜாத்தி அம்மாள் நேற்று முன்தினம் இரவு அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க
சென்றார். அங்கு சசசிகலா நடராஜனுடன் 45 நிமிடம் ராஜாத்தி அம்மாள்
பேசியிருக்கிறார்.
அப்பல்லோவுக்கு ராஜாத்தி அம்மாளை அனுப்ப கருணாநிதி முதலில் தயங்கி பின்னர்
ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து சசிகலா நடராஜன் தரப்புக்கு ராஜாத்தி
அம்மாளின் வருகை சொல்லப்பட்டிருக்கிறது.
அப்பல்லோவில் ராஜாத்தி
சசிகலா நடராஜனும் சம்மதிக்க ராஜாத்தி அம்மாள் அப்பல்லோ சென்று ஜெயலலிதா
உடல்நலம் விசாரித்தார். ராஜாத்தி அம்மாள் வசிக்கும் ஆழ்வார்பேட்டை சிஐடி
காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சசிகலா நடராஜன் செல்வது வழக்கம்.
ஆஞ்சநேயர் கோவில் நட்பு
அதேபோல் ராஜாத்தி அம்மாளும் அந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு அடிக்கடி செல்வது
வழக்கம். கோவிலில் இருவரும் சந்தித்தாலும் பரஸ்பரம் புன்னகைத்துக் கொள்வது
உண்டு. இந்த 'ஆஞ்சநேயர்' கோவில் சந்திப்புதான் தற்போது சசிகலா நடராஜனுக்கு
கை கொடுத்திருக்கிறதாம்...
சசிகலா புஷ்பா
ஜெயலலிதாவின் உடல்நிலையை முன்வைத்து ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா மூலம்
மத்திய அரசு தமக்கு நெருக்கடி கொடுக்கும் என நினைக்கிறாராம் சசிகலா
நடராஜன். சசிகலா புஷ்பாவின் தமக்கு எதிரான பேட்டிகளையும் மத்திய அரசுடன்
இணைந்து செயல்படுவதையும் தடுத்து நிறுத்தும் வகையில் அவரது சமூகத்தைச்
சேர்ந்தவரான ராஜாத்தி அம்மாளிடம் பேசுவதற்கு இது ஒரு சந்தர்ப்பம் எனவும்
சசிகலா நடராஜன் விரும்பியதாக கூறப்படுகிறது.
கனிமொழி
ஏற்கனவே கனிமொழிக்கு சசிகலா புஷ்பா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து
சர்ச்சையில் சிக்கியிருந்தார்.. ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பாவுக்கு
கனிமொழிதான் ஆதரவும் கொடுத்து வருகிறார்... இதனால் ராஜாத்தி அம்மாள்-
கனிமொழி மூலமாக எப்படியும் சசிகலா புஷ்பாவை அமைதிப்படுத்திவிடலாம் என்பது
சசிகலா நடராஜனின் கணக்கு. இது தொடர்பாகத்தான் ராஜாத்தி அம்மாளிடம் விரிவாக
சசிகலா பேசினார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
No comments:
Post a Comment