Latest News

  

தொடரும் போலீஸ் வேட்டை: ஜெ. உடல் நிலை பற்றி வதந்தி.. கோவையில் வங்கி ஊழியர்கள் இருவர் அதிரடி கைது


முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அவதூறாக பேசியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கனரா வங்கி ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து, பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், வலைத்தளங்கள் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வதந்திகள் தீவிரமாக பரப்பப்பட்டன.

இதுகுறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், வடக்கு சென்னை, துணை செயலாளர் ராஜ்கமல் ஆகியோர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்திருந்தனர். இதன்பேரில் போலீசார் 43 வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.

உயர் பதவியாளர்கள் இந்நிலையில், வதந்தி பரப்பிய நாமக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சதீஷ் மற்றும் மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோர் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர், திருமணி செல்வம், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலசுந்தரம் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.

கோவையில் மேலும் இருவர் கைது இந்நிலையில், கோவையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகி புனிதா என்பவர் அளித்த புகாரில் கனரா வங்கி ஊழியர்கள் ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வதந்தி பரப்புவோரை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவின்,சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதற்காக, கணினி வழி குற்றங்களை கண்டு பிடிப்பதில், திறமை வாய்ந்த போலீசார் மற்றும் நிபுணர்கள் இடம் பெற்ற சிறப்புக் குழு அமைக் கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பணி இக்குழுவினர், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தெரிவித்த தகவல்படி, முதல்வர் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய, 52 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வதந்தி கிளப்பியதில், மீதமுள்ள, 48 பேரை பிடிக்க, தனிப் படை போலீசார், மாநிலத்தின் பல பகுதிகளுக் கும் விரைந்துள்ளனர்.

7 வருடம் சிறை வதந்தி பரப்புவோருக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதனிடையே வதந்திகளை வேரறுக்க அரசு, ஜெயலலிதா குறித்த முழு உடல் தகுதி அறிக்கைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெகுஜன மக்களிடையே எழுந்துள்ளது.


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.