Latest News

5001 பேர் கலந்து கொண்ட அதிமுக பால் குட ஊர்வலம்... ஸ்தம்பித்தது வேலூர்

 
இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது ஷங்கர் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சி போலவே இருக்கிறது இல்லையா. ஆனால் இது வேலூரில் அதிமுகவினர் நடத்திய பால் குட ஊர்வலம். இந்த ஊர்வலத்தால் வேலூரே ஸ்தம்பித்துப் போனது. உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டிய அதிமுகவினர் தொடர்ந்து விதம் விதமான பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், ஜெயலலிதா பூரண குணம்பெற வேண்டி வணிக வரித்துறை அமைச்சர் கேசி வீரமணி தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வர்ர் ஆலயத்தில் 5001பெண்கள் பால்குடம் ஏந்தி மனமுருக பிரார்த்தனை செய்தனர். அண்ணா சாலையில் நடந்த இந்த ஊர்வலத்தில் வேலூர் மேயர் பா.கார்த்தியாயினி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 5001 பேர் திரண்டு வந்து பால்குடத்துடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அந்தப் புகைப்படம் தான் இது. இந்த ஊர்வலத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சில மணி நேரம் ஸ்தம்பித்து மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.