தமிழகத்தின் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்
தொகுதிகளைப்போலவே புதுவையின் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நவ. 19ல்
இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
புதுவையில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த
மாநிலத்தின், நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா
செய்ததால், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு
தொகுதியில் புதுவை முதல்வர் நாராயணசாமி போட்டியிட ஏதுவகா ஜான்குமார்
ராஜினாமா செய்திருந்தார். எனவே நாராயணசாமி அத்தொகுதியில் காங்கிரஸ்
சார்பில் களமிறங்க உள்ளார்.
நெல்லித்தோப்பு தொகுதிக்கும், தமிழக தொகுதிகளை போலவே, அக்டோபர் 26-ல்
வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. நவம்பர் 2ம் தேதி வேட்புமனு வேட்புமனு
தாக்கல் முடிவடையும். நவம்பர் 5ம் தேதி வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள்
ஆகும்.
நவம்பர் 22-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


No comments:
Post a Comment