தனது மனைவி இறந்தது தெரியாமல், அந்த சடலத்துடன் 5 நாட்கள் குடும்பம்
நடத்தியுள்ளார் அவரது 90 வயது கணவன்.
டெல்லியில் உள்ள கல்காஜி பகுதியில் வசித்து வருபவர் கோவிந்த் ராம். வயது
90. இவரது மனைவி கோபி(85). கோவிந்த் ராம் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை
பார்த்து ஓய்வு பெற்றார். பின்னர், அந்த பென்சன் தொகையையும், தபால்
அலுவலகத்தில் வைத்திருந்த சேமிப்பிலும், கிடைத்த சொற்ப பணத்தை கொண்டும்
மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோபி இறந்துவிட்டார். இதை
கண்டுபிடிக்க தெரியாத முதியவர் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து
வந்துள்ளார். அவர் வீட்டுக்குள் நுழையும் போதே வீட்டில் இருந்து
துர்நாற்றம் வீசியது. அதன்பின், கோபி சடலத்தைப் பார்த்து விட்டு
போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு அழுகிய நிலையில் கோபியின்
சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போதிய ஊட்டச்சத்து பற்றாகுறை காரணமாக
கோவிந்த் ராமும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மேலும் மனைவி
இறந்து விட்டரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியாத அளவுக்கு
மனநலமும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில்
போலீசார் அனுமதித்தனர்.
கோவிந்த் ராம் வாக்குமூலத்தின் படி, மனைவி சில தினங்களுக்கு முன் கட்டிலில்
படுத்துக் கொண்டிருந்த பொழுது தவறி கீழே விழுந்து விட்டார். அதன் பின்
அவர் உடலில் எந்த அசைவும் இல்லை என தெரிவித்தார்" என போலீஸார் கூறினர்.
No comments:
Post a Comment