எம்.பி. சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் அளித்த பணிப்பெண்களுக்காக
வாதாடி வரும் பெண் வழக்கறிஞரின் வீடு மற்றும் காரை மர்மநபர்கள் தாக்கி
சேதப்படுத்தியுள்ளனர்.
எம்.பி. சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் முதல்வர் ஜெயலலிதா மீது அடுக்கடுக்காக
புகார்கள் சுமத்தினார். இதையடுத்து சசிகலாவின் வீட்டில் வேலை செய்து வந்த
பானுமதி மற்றும் ஜான்சிராணி ஆகியோர் சசிகலா மீது தூத்துக்குடி எஸ்.பியிடம்
பாலியல் புகார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பணிப்பெண்கள் சார்பில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில்
வசித்து வரும் சுகந்திஜேசன் என்ற வழக்கறிஞர் ஆஜராகி வாதாடி வருகிறார்.
அவர் தனது குடும்பத்துடன் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சினுக்கு
சென்றிருந்தார்.
இந்நிலையில் சுகந்தியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்
அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகள், காரையும்
அடித்து நொறுக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த சுகந்தி காவல் நிலையத்தில் புகார்
அளித்துள்ளார். சசிகலா புஷ்பாவுக்கு எதிராக வாதாடி வரும் சுகந்தியின் வீடு
தாக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment