தமிழகத்துக்கு வரும் 21-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு வினாடிக்கு
3,000 கன அடிநீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி கண்காணிப்புக் குழு
உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி முன்னேச்சரிக்கை
நடவடிக்கையாக பெங்களூரில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
டெல்லியில் இன்று காவிரி மேற்பார்வை குழு கூட்டம் அதன் தலைவர் சசிசேகர்
தலைமையில் நடந்தது. இதில் தமிழகத்துக்கு செப்டம்பர் 21ம் தேதி முதல் 10
நாட்களுக்கு தலா 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று
காவிரி மேற்பார்வை குழு அறிவித்துள்ளது.
இதையடுத்து கர்நாடக அமைச்சர், போலீஸ் டிஜிபி, மற்றும் கமிஷ்னருடன்
பாதுகாப்பு பற்றி அவரச ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் நாளை காலை 6 மணி
முதல் 21 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி வரை இரண்டு நாட்களுக்கு பாதுகாப்பு கருதி
மதுக்கடைகளை மூட காவல் துறை உத்தரவிட்டது.
மேலும், காவிரி விவகார வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு
வருவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை
தெரிவித்துள்ளது.
நாளை பெங்களூரில் கலவரம் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுவதால் நாளை மற்றும்
நாளை மறுநாள் பெங்களூருக்கான பேருந்து சேவையை நிறுத்துவதாக கேரள அரசுப்
போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment