Latest News

​“பறப்பதிலும் பாகுபாடு” - விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட இஸ்லாமிய தம்பதி!


விமானத்தில் இருந்து முஸ்லிம் தம்பதியரை பயணம் செய்யவிடாமல் மதப்பாகுபாடு காரணமாக  தடுத்து இறக்கிவிடப்பட்டதாக திடுக்கிடும் புகார் அளித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரைச் சேர்ந்த ஃபைசல் ( வயது 36) - நாசியா அலி ( வயது 34) தம்பதியர், தங்களின் 10ஆம் ஆண்டு திருமண தினத்தை கொண்டாடுவதற்காக பாரிஸ் நகரத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் சின்சினாட்டி செல்வதற்காக டெல்டா விமான நிறுவன விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.

அப்போது விமான பணிக்குழுவின், (Cabin Crew) பெண் ஊழியர் ஒருவர், முஸ்லிம் பெண்மணி தலையைச் சுற்றி துணி ( head scarf) அணிந்துள்ளாதாகவும், மேலும், அத்தம்பதியரால் தான் அசவுகரியமாக உணர்வதாகவும் ஆட்சேபனை தெரிவித்து பைலட்டிடம் கூறியுள்ளார்.

இது குறித்து, விமான நிலைய தரைக் குழுவினரை (Ground Crew) தொடர்பு கொண்டு, முஸ்லிம் தம்பதியரை வெளியேற்றும் வரை விமானத்தை இயக்கப் போவதில்லை என விமானி தெரிவித்தார்.

இதனால், விமான நிறுவன ஊழியர்கள் விமானத்தில் இருந்த தம்பதியரை தங்களுடன் வருமாறு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர், சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முஸ்லிம் வழக்கறிஞர் குழு, மதப் பாகுபாடு காரணமாக விமானத்தில் இருந்து தம்பதியரை இறக்கி விட்டதாகக் கூறி டெல்டா விமான நிறுவனம் மீது அமெரிக்க சிவில் போக்குவரத்து துறையிடம் புகார் அளித்துள்ளது.

இது குறித்து, டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், வெளியிட்ட அறிக்கையில், அனைத்து வாடிக்கையாளர்களும் மரியாதையோடு நடத்தப்படுவதாகவும், மதம், நாடு, வயது, நிறம், இனம் என எவ்வகையிலும் பாகுபாடு பார்ப்பது இல்லை எனவும், மேலும் இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த நாசியா அலி “பிரென்ச் அலுவலர்களால் கடுமையான முறையில் கிரிமினல்கள் போல நடத்தப்பட்டோம், எனினும் நாங்கள் மீண்டும் விமான பயணம் செய்ய அனுமதிக்கப்படுவோம் என நம்பினேன், ஆயினும் நாங்கள் இது போன்று அவமானப்படுத்தப்படுவோம் என நினைக்கவில்லை. முஸ்லிம்களுக்கெதிரான இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இச்சம்பவம் அதற்கு ஒரு எடுத்ட்துக்காட்டாக அமைந்துவிட்டது” என்றார்.

பாகிஸ்தானில் இருந்து கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபைசல் குடும்பத்தினர் குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்க குடியுரிமையும் பெற்று விட்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.