செக் பவுன்ஸ் வழக்கில், தலைமறைவு குற்றவாளி தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. பல்வேறு வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் ஏய்ப்பு செய்தவர் விஜய் மல்லையா. வங்கிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், நைசாக இந்தியாவில் இருந்து தப்பி, லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
வங்கிகள் தொடர்ந்த பல்வேறு வகை வழக்குகளில் எதிலுமே மல்லையா நேரடியாக ஆஜராகவில்லை. பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வரும் செக் பவுன்ஸ் வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 4ம் தேதி, மல்லையா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் கோர்ட் பிறப்பித்துள்ளது. இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


No comments:
Post a Comment