தமிழகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் பெங்களூருவில் கத்திமுனையில் மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் பரப்பன அக்ரஹாரத்தில் பேயிங் கெஸ்டாக தங்கி இருந்து ஐடி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். கடந்த திங்கள்கிழமையன்று அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்திமுனையில் அப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான பரப்பன் அக்ரஹார போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் வல்லுநர் குழுவின் தலைவர் உக்ரப்பா அப்பெண்ணை நேரில் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளார். இச்சம்பவம் பெங்களூருவில் தனியே தங்கியுள்ள பெண் சாப்ட்வேர் என்ஜினியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment