ராஜ்யாபா எம்பி சசிகலா புஷ்பா மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று வருகை தந்தபோது 200 போலீசாரும் கராத்தே செல்வின் ஆதரவாளர்களும் பாதுகாப்பு அளித்திருக்கின்றனர். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மதுரை உயர்நீதிமன்ற் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணைக்காக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சசிகலா புஷ்பா ஆஜரானார். அப்போது சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அதிமுகவினர் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்திவிடக் கூடாது; அப்படி நடத்தினால் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதேபோல் வேறு கட்சியினர் ஏதேனும் போராட்டம் நடத்தி அதிமுகவினர் மீது பழிபோட்டுவிடுவார்களோ என்ற முன்னெச்சரிக்கையோடும் போலீசார் குவிக்கப்பட்டனராம். இதனால் நேற்று முன்தினம் காலையில் சசிகலா புஷ்பா மதுரை விமான நிலையத்தில் கால் வைத்தது முதல் இரவில் விமானத்தில் திரும்பிச் செல்வது வரை அவருக்கு சுமார் 200 போலீசார் பாதுகாப்பு அளித்திருக்கின்றனர். சசிகலா புஷ்பா வாகனத்தின் முன்பு பைலட் வாகனம் ஒன்றும், பின்னால் 2 பாதுகாப்பு வாகனங்களும் சென்றன. அவரது வாகனம் சாலையில் எந்த ஒரு இடையூறு இல்லாமல் செல்ல போக்குவரத்து போலீஸார் கூடவே சென்றனர். போலீசார் பாதுகாப்பு மட்டுமின்றி காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் தலைவர் கராத்தே செல்வினின் ஆதரவாளர்களும் சசிகலா புஷ்பாவுக்கு 'பாடி கார்டாக' பாதுகாப்பு அளித்தனர். ஒரு தலைவர் ரேஞ்சுக்குதான் மதுரையில் வலம் வந்தார் சசிகலா புஷ்பா!
No comments:
Post a Comment