தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து பணி ஓய்வு பெற்றவர் கே.ராமானுஜம். சேலம் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டை அருகே நேற்று ராமானுஜம் காரில் சென்ற போது காரை முந்திச் சென்ற லாரி டிரைவருக்கும், ராமானுஜத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ராமானுஜத்தை, லாரி டிரைவர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் புகார் கொடுக்கவே போலீசார், அங்கே விரைந்து வந்து லாரி டிரைவரை விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
சம்பவம் குறித்து முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜத்தை அவருடைய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோம். "என்ன விஷயத்துக்காக நீங்கள் (ராமானுஜத்திடம்) அவரிடம் பேச வேண்டும் ?" என்றது செல்போனில் வந்த மறுமுனை குரல். நாம் விபரத்தைச் சொன்ன பின்னர், அதே குரலே, "அது தவறான தகவல், லாரியை ரோட்டில் 'டோ' பண்ணி வைத்திருந்தார்கள். அவ்வளவுதான்" என்று விளக்கம் அளித்தது.
நன்றி : ஆனந்த விகடன்


No comments:
Post a Comment