சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை அவரது சொந்த மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கறிஞாராகப் பணியாற்றுகிறார் மணிமாறன். சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் வைத்து வழக்கறிஞர் மணிமாறன் என்பவரை மர்மநபர் ஒருவர் அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர் மணிமாறன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மணிமாறனின் சொந்த மகனே வெட்டியதாக கூறப்படுகிறது.
மணிமாறனின் மகன் பெயர் ராஜேஷ் என்றும் குடும்பத்தகராறில் சொந்த அப்பாவை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.
மத்திய படை பாதுகாப்புகள் நிறைந்த உயர் நீதிமன்றத்தில் வைத்தே வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த ஜூன் மாதத்தில் 4 வழக்கறிஞர்கள் முன் முன் விரோதம், குடும்பத்தகராறு காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாக பாதுகாப்புகள் நிறைந்த உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வக்கீல் மணிமாறன் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை... சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் வக்கீல் அப்பாவை வெட்டிய மகன் - வீடியோ




No comments:
Post a Comment