திமுக தலைவர் கருணாநிதியை ஜாதி ரீதியாக மதிமுக பொதுச்செயலர் வைகோ விமர்சித்துள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது:"கலைஞர் நல்லா ஊதுவார்" என்று முன்பு ஒருமுறை பேசினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது வைகோவும் அதே பொருளில் பேசியுள்ளார்.
கலைஞரையும் திமுகவையும் விமர்சிக்க ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளபோது, இத்தகைய சாதிரீதியான தாக்குதல்களில் தலைவர்களே ஈடுபடுவது வேதனையளிக்கிறது. சாதி ஒழிப்புக் களத்தில் போராடும் எவராலும் இதை ஏற்க முடியாது. இவ்வாறு ஆளூர் ஷாநவாஸ் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment