எங்களை நீக்கும் அதிகாரம் விஜயகாந்திற்கு இல்லை என்று டிஸ்மிஸ் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் பார்த்திபன் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, அக்கட்சியின் கொள்கை பரபரப்பு செயலாரும், எம்எல்ஏவுமான சந்திரகுமார், எம்எல்ஏ பார்த்திபன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் தேமுதிக மாநாடு, பொதுக்குழு கூட்டம் என எங்கும் கூட்டணி குறித்து அறிவிக்காமல் திடீரென ஒருநாள் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்துவிட்டதாகக் கடும் விமர்சனம் செய்தனர். இதுகுறித்து கூறிய சந்திரகுமார், தேமுதிக இப்போது எடுத்துள்ள முடிவு தற்கொலைக்கு சமமானது. தனது முடிவை அவர் மாற்றிக்கொண்டால்தான் தேமுதிக இயக்கத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். நாளை மதியம்வரை விஜயகாந்த்துக்கு நேரம் தருகிறோம். அதற்குள் அவர் எங்களை சந்தித்து பேசுவார் என்று நம்புகிறேன் என்று சந்திரகுமார் தெரிவித்தார். இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியவர்களை கட்சியில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார். அந்த பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளையும் கட்சித் தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார். இதையடுத்து தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான எம்.எல்.ஏக்கள் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களை நீக்கும் அதிகாரம் விஜயகாந்திற்கு இல்லை பொது குழுவை கூட்டிதான் எங்களை நீக்க முடியும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் தேமுதிகவில் பிளவு ஏற்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவரான சந்திரகுமார் தலைமையில் எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment